Home /News /tamil-nadu /

பல்லாவரத்தில் மாமூல் கேட்டு பிரியாணி கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகள் - சிசிடிவி காட்சிகள்

பல்லாவரத்தில் மாமூல் கேட்டு பிரியாணி கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகள் - சிசிடிவி காட்சிகள்

பிரியாணி கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகள்

பிரியாணி கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகள்

Pallavaram Briyani Shop Attack | சென்னை பல்லாவரம் அருகே மாமூல் தராததால் பிரியாணி கடை மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

    பல்லாவரம் அருகே மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் மாமூல் கேட்டு தர மறுத்த கடையின் உரிமையாளர் மற்றும் கடையை அடித்து சூறையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பிரதான சாலையில் அனீஷ்,என்பவர் பிரியாணி கடை,மற்றும் டீ ஸ்டால் என இரண்டு கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடைக்குச் சென்ற இரண்டு நபர்கள் கடையில் இருந்த உரிமையாளர்களிடம் மாதம் மாதம் 10.000 ரூபாய் செலவிற்கு கொடுக்கு வேண்டும் இல்லையென்றால் கடை நடத்த விடமாட்டோம் என கூறி உள்ளனர்.

    இதனால் 3,000 ரூபாய் மட்டும் அனுப்புவதாகக் கூறி கூகுள் பே மூலமாக அனுப்பிள்ளார். மீதமுள்ள 7,ஆயிரம் ரூபாயை உடனே தரும்படி கேட்டதும் அதற்கு பணம் தற்ப்போது இல்லை என கூறியதும் ஆத்திரமடைந்த இரண்டு நபர்கள் சாலையில் இருந்த கற்களை எடுத்து கடையை நோக்கி வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்,

    அதுமட்டுமின்றி கடைகளை அடித்து நொறுக்கி கடையின் உரிமையாளர் தாக்கியுள்ளனர். இதை பார்த்ததும் கடையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.அதன்பின் பொதுமக்கள் கூட்டம் கூடவே இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.



    இந்த சம்பவம் குறித்து அப்பகுதி வியாபாரிகள், சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்,சேதமடைந்த கடைகளை பார்வையிட்டனர். பின்னர்,அந்தப் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர்கள் திருநீர்மலை,ரங்கா நகர் 2-வது தெருவை சேர்ந்த சுகுமார் (வயது-36) மற்றும் தினேஷ் (வயது-38) என்பது தெரிய வந்தது.

    Also Read : படிக்கட்டில் தொங்கிய பயணம் செய்த பள்ளி மாணவர்கள்... நடத்துனர் கண்டித்ததால் தாக்குதல்

    இதையடுத்து அவர்களது வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் சங்கர் நகர் போலீசார் கைது சங்கர் நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் நடத்தினர். இந்த விசாரணையில் சுகுமார் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், பல்லாவரம்,பம்மல் அதன் சுற்றியுள்ள கடைகளில் 5000, மற்றும் 10,000 வரை மாமூல் கேட்டு வாங்கி வந்ததும் தெரியவந்தது.

    தினேஷ், சுகுமார் உடன் இணைந்து கடந்த ஆறு மாத காலமாக மாமூல் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர் அதன்பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai, Crime News, Pallavaram

    அடுத்த செய்தி