சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான "ரூட் தல" பிரச்னை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களும் "ரூட் தல" போல பேருந்தில் ஆபாசமாக பயணம் செய்து பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது பெருகத்தொடங்கியுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட் தல பிரச்சனையில் எந்த கால்லூரி மாணவர்கள் கெத்து எனக்கூறி பேருந்தின் மேற்கூரையில் பயணம் செய்வது, ஜன்னல் கம்பிகளில் தொங்கியபடி பயணம் செய்வது, பேருந்தில் பாட்டுப்பாடி தாளம் தட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் பயணம் செய்வது, தங்களுக்குள்ளாகவே மோதிக்கொள்வது என சென்னையிப் ரூட்டுத்தல பிரச்னை என்பது நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுப்பட்டும் ரூட்டுத் தல பிரச்னையில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்களை காவல் நிலையம் அழைத்து வந்து எழுதி வாங்கி அனுப்பவது என போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் போல பள்ளி மாணவர்களும் தற்போது பேருந்துகளில் மேற்கூரையில் தொங்கியபடி பயணம் செய்வது, படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தது என ரூட்டுத்தல பிரச்னையை தொடங்கியுள்ளனர்.
பள்ளி மாணவர்கள்
சமீபகாலமாக சென்னையில் பள்ளி மாணவர்களுக்கும் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கும் இடையே பிரச்னை எழுவதும் அவர்களை மாணவர்கள் தாக்கி வருவதும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் வேலையில் புரசைவாக்கம் கோயம்பேடு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அபாயகரமான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
குறிப்பாக 16 K என்ற தடம் எண் கொண்ட பேருந்தில் கோயம்பேடு அருகே பள்ளி மாணவர்கள் பேருந்தில் சாகசம் செய்து பயணம் செய்யும் வீடியோவும், 29 A என்ற தடம் எண் கொண்ட பேருந்தில் புரசைவாக்கம் பகுதில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோவும் வெளியாகியுள்ளது. வீடியோவில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் யார் என்ற விசாரணையில் போலீசார் ஈடுப்பட்டு வரும்வேளையில், கல்லூரி மாணவர்கள் போல பள்ளி மாணவர்கள் மத்தியிலும் ரூட்டுத்தல கலாச்சாரம் தொடங்குகிறதா? என்றும், இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக சென்னை காவல்துறை தீர்வு காண வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.