• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் கத்தி முனையில் கல்லூரி மாணவர்களிடம் கைவரிசை.. 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னையில் கத்தி முனையில் கல்லூரி மாணவர்களிடம் கைவரிசை.. 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னையில் கத்தி முனையில் கல்லூரி மாணவர்களிடம் கைவரிசை.. 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னையில் கத்தி முனையில் கல்லூரி மாணவர்களிடம் கைவரிசை.. 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை திருமங்களம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாடி மேம்பாலம் அருகே கத்திமுனையில் கல்லூரி மாணவர்களிடம் கைவரிசை காட்டிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

  • Share this:
    கொரட்டூர், திருமங்கலம், வில்லிவாக்கம் ஆகிய 3 காவல் நிலைய சந்திப்பான பாடி மேம்பாலத்தில் அடுத்தடுத்து தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவத்தால் இரவு பணி முடிந்து வீடு திரும்புவோர் மற்றும் பெண்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    சென்னை பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பிஎச்டி மாணவர் ருத்ராவை வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் பறித்து சென்றுள்ளனர்.

    அதேபோல், மற்றொரு தனியார் கல்லூரி மாணவர் பிரத்திபனிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த 3.5 சவரன் தங்க செயின் மற்றும் விலை உயர்ந்த செல்போனையும் அந்த மர்ம கும்பல் பறித்து சென்றது.

    இருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி கைவரிசை காட்டிய 6 பேர் கும்பல் மீது திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Also read: குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் - 4 பேர் கைது!

    திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உயர் ரக ராயல் என்ஃபீல்டு வாகனம் திருட்டு வழிப்பறி செல்போன் பறிப்பு செயின் பறிப்பு என தொடர் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள்  பீதிக்கு ஆளாகியுள்ளனர்.

    மேலும் அம்பத்தூர்,அண்ணாநகர் காவல் மாவட்ட எல்லைகளில்  உள்ள கொரட்டூர், திருமங்கலம், வில்லிவாக்கம் ஆகிய 3 காவல் நிலையத்தை இணைக்கக் கூடிய இந்த பாடி மேம்பாலம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியை மேற்கொள்ளவில்லை எனவும் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களும்  பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: