சென்னை அசைவ உணவகத்தில் கெட்டுப்போன மீன்கள்.. ஏழை குழந்தைகளை சாப்பிட அழைத்துச் சென்றவர்களுக்கு ஷாக்..!!
சென்னை அசைவ உணவகத்தில் கெட்டுப்போன மீன்கள்.. ஏழை குழந்தைகளை சாப்பிட அழைத்துச் சென்றவர்களுக்கு ஷாக்..!!
சென்னை உணவகத்தில் ஆய்வு
Expired Food | சென்னை மாநகர உணவு பாதுகாப்பு துறையினர் ஹோட்டலில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது கெட்டுப்போன மீன்களை உணவிற்காக பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர்.
சென்னை பிரபல தனியார் ஓட்டலில் குப்பைக்கு போக வேண்டிய நல்லி எலும்புகள் மீண்டும் தட்டிற்கு வந்ததால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை ராயபுரத்தில் உள்ள உயர்தர அசைவ உணவகமான 3 கிளை ஹோட்டலிலும் திடீரென உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக தனியார் தொண்டு நிறுவன அமைப்பினர் 32 ஏழை எளிய குழந்தைகளுடன் சூரிய நாராயண தெருவில் உள்ள பாண்டியாஸ் உணவகத்திற்கு உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளனர். சாப்பிடுவதற்காக பொறித்த மீன்களை ஆர்டர் செய்துள்ளனர். அப்பொழுது மீன்களில் இருந்து துர்நாற்றம் வந்ததைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர்களிடம் முறையிட்டுள்ளனர்.
ஓட்டல் உரிமையாளர்கள், மாற்று உணவுப்பொருட்களை தருவதாக கூறியுள்ளனர். ஆனால் தொண்டு நிறுவன அமைப்பினர் தற்பொழுது தாங்கள் 32 குழந்தைகளுடன் சாப்பிட்டு உள்ளதாகவும் இதனால் குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு நேரிடக்கூடும் என்பதனால் மாற்று உணவை வாங்க மறுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் உடனடியாக விரைந்து வந்த சென்னை மாநகர உணவு பாதுகாப்பு துறை இயக்குனர் சதீஷ் குமார் தலைமையிலான குழுவினர், பாண்டியாஸ் ஹோட்டலில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கெட்டுப்போன மீன்களை உணவிற்காக பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர்.
கெட்டுப்போன அசைவ பொருட்களான மீன் மற்றும் கோழிக்கறி ஆட்டுக்கறி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதனை தொடர்ந்து அவர்களின் இரண்டு கிளைகளிலும் சோதனை மேற்கொண்டனர் ராயபுரம் சிமெண்ட்ரி ரோடு சாலையில் உள்ள பாண்டியாஸ் உணவகம் மற்றும் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள பாண்டியாஸ் உணவகம் ஆகிய இரண்டு இடங்களிலும் சோதனை மேற்கொண்டு கெட்டுப்போன உணவுகளை பறிமுதல் செய்தனர்
அப்பொழுது உணவு பாதுகாப்பு துறை இயக்குனர் சதீஷ் குமார் கூறுகையில் அனைத்து அசைவ பொருட்களிலும் துர்நாற்றம் வீசுவதாகவும் அதனால் சோதனைக்காக அசைவப் பொருட்களை ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் ஆய்வக அறிக்கை அடிப்படையில் தரம் உள்ளதா என்பதை சோதனை செய்த பிறகு முடிவு அறிவிக்கப்படும் அதுவரையிலும் உணவகத்தில் வியாபாரத்தை தொடரக்கூடாது என்று கூறி இருப்பதாகவும் தெரிவித்தார். கெட்டுப்போன எழும்பு துண்டுகளை ஐஸ் கட்டிகள் போட்டு மீண்டும் பயன்படுத்துவதற்காக எடுத்து வைத்திருப்பதாகவும் அதனை திறக்கும்பொழுதே வாந்தி எடுக்கும் அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாக குற்றம்சாட்டினர்.
செய்தியாளர்: அசோக்குமார்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.