தயக்கம், சந்தேகத்தால் சென்னையில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த நோயாளிகள் 50% பேர் தடுப்பூசி போடவில்லை!

கொரோனா தடுப்பூசி!

தமிழகத்தில் இதுவரை நடைபெற்றுள்ள கொரோனா இறப்புகளில் பெரும்பாலானவை ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் உடையது.

  • Share this:
மூன்றாவது அலையை தடுக்க தடுப்பூசி அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், சென்னையில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த நோயாளிகள் 50% பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை மாநகராட்சி இதுவரை சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருக்கக்கூடிய 3.3 லட்சம் நபர்களை கண்டறிந்து உள்ளது. இதில் 1.5 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டுள்ளனர். 80 ஆயிரம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி முடித்துள்ளனர். மீதமுள்ள 1.8 லட்சம் இன்னும் ஒரு டோஸ் தடுப்பு ஊசி கூட செலுத்தி கொள்ளவில்லை.

"சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு இன்னமும் தடுப்பூசி குறித்த தயக்கமும் சந்தேகமும் இருக்கிறது. சென்னை மாநகராட்சி வீடு வீடாக சென்று நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. பல காரணங்கள் கூறி தடுப்பூசி போடுவதை தவிர்க்கின்றனர். "  என்று சென்னை மாநகராட்சி சுகாதார துணை ஆணையர் மனிஷ் நர்நவாரே ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

Also read: தமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு; 24 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. முன்களப் பணியாளர்களுக்கு அடுத்த படியாக இணை நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தொடர்ந்து மத்திய அரசும், மாநில அரசும் வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்றுள்ள கொரோனா இறப்புகளில் பெரும்பாலானவை ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் உடையது. இன்னும் சில மாதங்களில் மூன்றாவது அலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இணை நோயாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிக அவசியமாகிறது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டு வரும் ஆய்வில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இணை நோயாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கு மரணம் ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நோயின் தீவிரம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் போது குறைவாகவே இருப்பதாகவும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் இணை நோயாளிகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகிறார்.

கொரோனாவால் உயிரிழப்பவர்களில் 90% பேருக்கு ஏதாவது ஒரு இணை நோய் இருப்பது தெரியவந்துள்ளது எனவும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சையினால் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தொற்று நோய் மருத்துவர் வித்யாலக்‌ஷ்மி தேவராஜன் கூறுகிறார்.
Published by:Esakki Raja
First published: