தீயில் விபத்தில் சிக்கிய பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய ரியல் ஹீரோ செவிலியர் ஜெயக்குமார்...

Youtube Video

தீ விபத்தில் சிக்கிய பச்சிளம் குழந்தைகள் அனைத்தும் நலமுடன் இருப்பதாக அறிந்த பின்பே நிம்மதி அடைந்தேன் என்று சென்னை கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை செவிலியர் ஜெயக்குமார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பதற்றமான சூழலில் குழந்தைகளை காப்பாற்றியது எப்படி என, அவரே விவரிக்கிறார்.

 • Share this:
  சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா தாய்சேய் நல மருத்துமவனையின் இரண்டாவது தளத்தில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு உள்ளது. அங்கு கடந்த 26ம் தேதி இரவு 9 மணியளவில் ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றியது. இதனால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. அந்த சமயத்தில் தீ விபத்து ஏற்பட்ட வார்டில் 47 குழந்தைகள் இருந்தன. தீ விபத்தை கண்டு அங்கிருந்தவர்கள் அலறியதை கண்ட செவிலியர் ஜெயக்குமார், தன் உயிரை பணயம் வைத்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டார்.

  கண்ணாடி ஜன்னல்களை உடைத்து வார்டுக்குள் சென்ற அவர் தீயை முழுவதுமாக அணைத்தார். ஆனால் கரும்புகையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஜெயக்குமார் அங்கேயே மயங்கி விழுந்தார். எனினும் அதற்குள் அங்கு வந்த பிற செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயக்குமார், முதலுதவி சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறினார்.

  மேலும் படிக்க... தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு.. ஆலைகளை மூட வேண்டிய நிலையில் உற்பத்தியாளர்கள்...

  இந்நிலையில் பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமாரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு வழங்கினார். குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என இறைவனை வேண்டியதாகவும், இதுபோன்ற நிலையை தனது வாழ்வில் சந்தித்ததில்லை என்றும் செவிலியர் மாலா கூறியுள்ளார்.  இதற்கிடையே, மீட்பு பணியில் ஈடுபட்ட செவிலியர்கள் அனைவருக்கும், மருத்துமவனை இயக்குநர் கலைவாணி பாராட்டு சான்று வழங்கி கவுரவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பச்சிளம் குழந்தைகள் வார்டில் centralized ஏசி பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார். செவிலியர் ஜெயக்குமாரை முதலமைச்சர் பாராட்டியது தங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பதாக கலைவாணி குறிப்பிட்டார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: