• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் முக்கிய வணிக பகுதிகள் மீண்டும் திறப்பு!

சென்னையில் முக்கிய வணிக பகுதிகள் மீண்டும் திறப்பு!

கோப்பு படம்

கோப்பு படம்

எதிர்வரும் காலங்களில் மீண்டும் கடைகளை அடைக்காமல் இருக்க வேண்டும் என  வியாபாரிகள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share this:
newsகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து  சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான தி.நகர் ரங்கநாதன் தெரு, அபிபுல்லா தெரு, ராயபுரம் கல் மண்டப சாலை உள்ளிட்ட 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் திறப்பதற்கு நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

Also read : தமிழகத்தில் நிதிநிலை வளர்ச்சி ஏற்பட வேண்டுமென்றால் வரியை உயர்த்தி ஆக வேண்டும் - பொருளாதார வல்லுநர்

அதே நேரத்தில் கடைகளில் கட்டாய முகக்கவசம்,  பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி, வெப்ப பரிசோதனைக்கு பிறகே வாடிக்கையாளர்களுக்கு அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற அறிவுருத்தலையும் சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்க செயலாளர் சர்புதீன் கூறியதாவது: கொரோனா தொற்று இரண்டாம் அலை  பரவலின் போது ஒரு மாதத்திற்கு மேல் ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக பாதிப்பை சந்தித்து வருகிறோம். தற்போது மீண்டும் ஒன்பது நாட்கள் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால், ஆட்களுக்கு ஊதியம் கொடுப்பது, கடைகளுக்கு வாடகை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கிறோம். இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்.

Also Read :  நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

எனவே எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் கடைகளை அடைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் புதிய கட்டுப்பாடுகளை விதித்தால் அதை ஏற்க தயாராக இருக்கிறோம். விடுமுறை நாட்களில் கடைகளை அடைப்பது, நேர கட்டுப்பாடு விதிப்பது என தேவைப்பட்டால் அரசாங்கம் புதிய விதிமுறைகளை அறிவித்தாலும் அதை தாங்கள் பின்பற்ற தயாராக இருக்கிறோம், என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: