Home /News /tamil-nadu /

முதல்வர் சென்னையில் பிறந்ததால் விவசாயம் குறித்து தெரியவில்லை - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

முதல்வர் சென்னையில் பிறந்ததால் விவசாயம் குறித்து தெரியவில்லை - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

R B UdhaiyaKumar Press Meet | எதிர்கட்சி தலைவரை போலி விவசாயி என வேளாண் அமைச்சர் கூறியது வன்மையாக கண்டிகதக்கது. அரசியல் நகாரீகத்தோடு பதிலளிக்க வேண்டும் இல்லையெனில் நாங்களும் அந்த நிலைக்கு செல்வோம்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்பொழுது பேசிய அவர், ’விவாசியிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு மத்திய அரசு நிதி வழங்கினாலும் வழங்காவிட்டாலும் ஜெயலலிதா அரசு நெல்லுக்கான தொகையை வழங்கி வந்தது. ஆனால் திமுக அரசு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என விவசாயிகளுக்கு நிதி வழங்காமல் உள்ளது. இதனை தான் எதிர்கட்சி தலைவர் விவசாயிகள் அலைகழிக்கப்படுவதாக சொன்னார். இதற்கு எதிராக தரக்குறைவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    அவர் போலி விவசாயி என சொல்லியிருக்கிறார். எதனடிப்படையில் அப்படி சொன்னார்கள் என தெரியவில்லை. பரம்பரை பரம்பரையாக விவசாயித்தில் ஈடுபட்டு வருபவர் எதிர்கட்சி தலைவர். தற்போதைய முதல்வருக்கு தான், சென்னையில் பிறந்ததாதல் விவசாயம் குறித்து தெரியவில்லை. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மற்ற பகுதிகளுக்கு செல்லும் போது தான் விவசாயத்தை பற்றி தெரிந்து கொண்டார்.

    விவசாய மக்கள் எதிர்கட்சி தலைவருக்கு கொடுத்த பெயர்களை எல்லாம் பொறுத்து கொள்ள முடியாமல் உப்பு சப்பில்லாமல், யானை பசிக்கு சோளப் பொறி போல வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். பேரிடர் காலங்களில் மக்களை காத்தத்தற்கு பிரதமரே முன்னாள் முதல்வரை பாராட்டியுள்ளார்.

    எதிர்கட்சி தலைவரை போலி விவசாயி என வேளாண் அமைச்சர் கூறியது வன்மையாக கண்டிகதக்கது. அரசியல் நாகரீகத்தோடு பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் நாங்களும் அந்த நிலைக்கு செல்வோம். தங்கமில்லாமால் திருமணம் நடைபெற கூடாது என்று தான் அம்மா தாலிக்கு தங்கம் திட்டத்தை இந்தியாவிற்கு எடுக்காட்டாக கொண்டு வந்தார்

    அவர் கொண்டு வந்த ஒரே காரணத்தினால் தான் இதனை நிறுத்தி உள்ளனர். அவர்களின் நிர்வாக குளறுபடி குறித்து விளக்கமளித்தனர், அது ஏற்று கொள்ளும் வகையில் இல்லை. கொரோனா காலத்தில் இந்த திட்டம் தொடர முடியமல் போனதால் 3 லட்சம் விண்ணப்பதாரர்கள் நிலுவையில் உள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் இருப்பது அரசின் இயலாமை தானே தவிர திட்டத்தின் இயலாமை அல்ல.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: DMK, MK Stalin

    அடுத்த செய்தி