ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றம்... மயிலாப்பூர், மந்தைவெளியில் மாற்று வீடுகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றம்... மயிலாப்பூர், மந்தைவெளியில் மாற்று வீடுகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இனிவரும் காலங்களில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் முன், மறுகுடியமர்வு பகுதி குறித்து மக்களின் கருத்துகள் பெறப்பட்டு பரிசீலிக்கப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆர்.ஏ. புரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு அங்குள்ள மக்களுக்கு தொலைவில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், அப்பகுதி மக்கள் மந்தவெளி, மயிலாப்பூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டி வரும் வீடுகளில் மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

  சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் பக்கிங்காம் கால்வாய் நீர்நிலையை ஆக்கிரமித்து, பல பத்தாண்டுகளாக 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இதில், ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

  இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த முதியவர் கண்ணையன் என்பவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இங்கிருந்து வெளியேற்றப்படும் தங்களுக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாப்பூரில் விரும்ப தகாத நிகழ்வு நடந்துள்ளது. வரும் காலங்களில் குடியிருப்பு அகற்றும் போது மாற்று இடம் வழங்குவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.

  இதையும் படிங்க: ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு.. தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு

  இனிவரும் காலங்களில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் முன், மறுகுடியமர்வு பகுதி குறித்து மக்களின் கருத்துகள் பெறப்பட்டு பரிசீலிக்கப்படும். ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து மறுகுடியமர்வு கொள்கை விரிவாக உருவாக்கப்படும்.

  மந்தவெளி, மயிலாப்பூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டி வரும் வீடுகளில், ஆர்.ஏ.புரம் மக்கள் மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள். ஆர்.ஏ.புரம் உயிரிழப்பே கடைசியாக இருக்க வேண்டும் என்று  கூறினார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: MK Stalin, Tamilnadu government, TN Assembly