Home /News /tamil-nadu /

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளையில் திடீர் ட்விஸ்ட்... நாடகமாடிய ஊழியர் டிக்காராம் கைது

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளையில் திடீர் ட்விஸ்ட்... நாடகமாடிய ஊழியர் டிக்காராம் கைது

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை சம்பவம்

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை சம்பவம்

Chennai : திருவான்மியூர் ரயில் நிலைய கவுண்டரில் பணத்தை திருடி நாடகமாடிய ஊழியர் கைது.

    திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை வழக்கில் பணத்தை ஊழியரே திருடிவிட்டு நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலம். 

    சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் நேற்று அதிகாலை பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். வழக்கமாக 4 மணிக்கு திறக்கப்படும் டிக்கெட் கவுண்டர் ஆனது நேற்று நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த பயணிகள் சிலர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸாரிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர்.

    இதனையடுத்து டிக்கெட் கவுண்டர் பகுதிக்கு விரைந்த போலீசார் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு டிக்கெட் கவுண்டரில் பணியாற்றும் ஊழியர் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணிகளை திணிந்த நிலையில் இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

    Also Read: பணத்துக்காக பெண் மருத்துவர் செய்த காரியம் - ஆக்‌ஷனில் இறங்கிய ஆட்சியர்

    இதனையடுத்து அவரது கை, கால் கட்டுகளை அவிழ்த்த போலீஸார் ஊழியரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது தன்னுடைய பெயர் டிக்காராம் மீனா என்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 4 வருடங்களாக தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

    நேற்று வழக்கம்போல் அதிகாலை டிக்கெட் கவுண்டரை திறக்க வந்த போது மூன்று பேர் கவுன்ட்டருக்குள் வந்து, துப்பாக்கிமுனையில் தன்னை மிரட்டி கை கால்களைக் கட்டிப்போட்டுவிட்டு டிக்கெட் கவுண்டரில் இருந்து சுமார் 1.25 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுச் சென்றதாக போலீஸாரிடம் கூறினார். பின்னர் ரயில்வே ஊழியர் டிக்காராம் புகாரளித்ததின் பேரில் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

    Also Read: கடைசியாக பார்த்து சென்ற காதலி..உருக்கமாக கடிதம் எழுதிவைத்து உயிரைவிட்ட இளைஞர்

    இதனையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைத்து சோதனை மேற்கொண்ட போலீசார் இதுகுறித்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரயில்வே ஆய்வாளர்கள் வைரவன், ஷாலினி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சச்சின் உள்ளிட்டோர் கொண்ட 3 தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    ரயில்வே டிக்கெட் கவுண்டர் உள்பகுதி மற்றும் வெளிபுறத்தில் சிசிடிவி கேமரா பொறுத்தாததால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் தடையங்களை சேகரிப்பதில் ரயில்வே போலீசார்க்கு ஒரு சவாலாக இருந்தது. டைடல் பார்க் சிக்னலில் மட்டுமே சிசிடிவி கேமரா உள்ளது.  அருகில் வேறு எங்கும் சிசிடிவி கேமரா இல்லாததால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எந்த வழியாக உள்ளே வந்திருப்பார்கள் என்பது குறித்தும் விசாரணையை மேற்கொண்டனர்.

    Also Read: தோழிகளின் கிண்டல்.. மனஉளைச்சலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

    டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வந்த டிக்காரம் மற்றும் அவரது மனைவியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ரயில்வே ஊழியரான டிக்காராம் கைது செய்யப்பட்டுள்ளார்.

    டிக்கெட் கவுண்டரில் இருந்த பணத்தை  டிக்காராம் தன் மனைவியின் உதவியுடன் கொள்ளையடித்து நாடகமாடியது தெரியவந்துள்ளது. ரயில் நிலையம் பகுதியில் அமைந்திருந்த சிசிடிவி கேமராவில் டிக்காராமின் மனைவி வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில் டிக்காராம் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Money, Railway Station, Theft, Thiruvanmiyur

    அடுத்த செய்தி