ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு.. தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு

ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு.. தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு

ஆர்.கே.நகர்

ஆர்.கே.நகர்

RA puram: ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த முதியவர் கண்ணையன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆர்.ஏ. புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த முதியவர் கண்ணையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் பக்கிங்காம் கால்வாய் நீர்நிலையை ஆக்கிரமித்து, பல பத்தாண்டுகளாக 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இதில், ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

  ராஜிவ் ராய் என்கிற கட்டுமான தொழிலதிபர், இளங்கோ தெரு அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ள நிலையில், இளங்கோ தெருவில் குடியிருக்கும் அனைவரும், பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து உள்ளதாக, நீதி மன்றத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பல ஆண்டுகளாக இடிக்கப்படாமல் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை கடந்த சில நாட்களாக பொதுப்பணி துறை அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர்.

  ஏற்கனவே முதல் கட்டமாக 130 வீடுகள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் அவர்களுக்கு மறுகுடியமர்வுக்காக பெரும்பாக்கம், எழில் நகர், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் வழங்கியிருந்தனர். ஆனால் அந்த வீடுகள் எதுவும் சரியான பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடுடோடு இருப்பதாகவும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அந்த பகுதி சரியாக இல்லை எனவும் கூறி இளங்கோ தெரு மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  இதையும் படிங்க: சாலை விபத்தில் பலியான செயின் பறிப்பு கொள்ளையன்.. கூட்டாளி சொன்ன அதிர்ச்சித் தகவல்

  இந்நிலையில் இளங்கோ தெரு பகுதியில் மீதமுள்ள வீடுகளை அகற்ற நேற்று காலை 8 மணி முதலே பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து ஜேசிபி வாகனம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

  தங்களுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் மோசமான நிலையில் சுகாதார சீர்கேடுகளோடு இருப்பதாகவும் தங்கள் வாழ்வாதாரம் சென்னையின் மையத்தில் இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் தங்களை குடியமர்த்தினால் தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என மக்கள் கேள்வி எழுப்பி அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இதனால் அதிகாரிகளுக்கும் இளங்கோ தெரு மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் வி.ஜி கண்ணையா என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு ஆக்கிரமிப்பிற்கு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென தீ வைத்து கொண்டார்.

  மேலும் படிக்க: உதயநிதியை பிராண்டிங் பண்றாங்க.. திமுகவில் அங்கீகாரம் இல்லை: பாஜகவில் இணைந்த திருச்சி சிவா மகன் பேச்சு

  உடனடியாக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முதியவர் கண்ணையன் உயிரிழந்தார்.  பாமக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக கண்ணையன் இருந்துவந்துள்ளார். அவரது இறப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Death, Encroachment