ஆவடியில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த பல்சர் பைக்
ஆவடியில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த பல்சர் பைக்
தீ பிடித்து எரிந்த பல்சர் பைக்
Pulsar Bike Fire | பெட்ரோல் வாகனம் என எந்த வாகனத்தையும் கோடைகாலத்தில் பராமரிப்பு முறையாக செய்யவில்லை என்றால் இதுபோன்ற தீ விபத்து நடைபெறும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆவடி பேருந்து நிலையம் அருகே தீ பிடித்து எரிந்த பல்சர் இருசக்கர வாகனத்தை பொதுமக்களே தண்ணீர் லாரியை மடக்கி தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
ஆவடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தன்னுடைய பல்சர் இருசக்கர வாகனத்தை பூந்தமல்லி அருகே வாட்டர் வாஷ் செய்து அங்கிருந்து ஓட்டி வந்தபோது பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் லீக் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென தீ பிடித்தது. இதில் பல்சர் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் சாலையில் சென்ற தண்ணீர் டேங்கர் லாரியை வழிமறித்து கொழுந்துவிட்டு எரிந்த இருசக்கர வாகனத்தை பெருமுயற்சி செய்து தீயை அணைத்தனர். எனினும் பேருந்து நிலையம் அருகே பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோடைகாலம் என்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சற்று கவனமாக வாகனத்தை பராமரித்து இயக்க வேண்டும் எனவும் இது போன்ற அசம்பாவிதங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நடைபெறும் எனவும் பேட்டரி வாகனம் பெட்ரோல் வாகனம் என எந்த வாகனத்தையும் கோடைகாலத்தில் பராமரிப்பு முறையாக செய்யவில்லை என்றால் இதுபோன்ற தீ விபத்து நடைபெறும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் : கன்னியப்பன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.