Home /News /tamil-nadu /

உக்ரைனில் இருக்கும் எல்லோரும் வந்தால்தான் மனம் நிம்மதியடையும் - தமிழிசை

உக்ரைனில் இருக்கும் எல்லோரும் வந்தால்தான் மனம் நிம்மதியடையும் - தமிழிசை

தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜன்

எந்த சூழல் ஏற்பட்டாலும் பாரத தேசத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மீட்டெடுக்க வேண்டும். - தமிழிசை

    உக்ரைனில் இந்தியர்கள் எல்லோரும் மீட்டெடுக்க முயற்சி செய்யும் பிரதமருக்கு தமிழிசை செளந்திரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் நாட்டிலிருந்து ஹங்கேரி, டெல்லி வழியாக சென்னை திரும்பிய பாண்டிச்சேரியை சேர்ந்த மாணவி ரோஜா சிவமணி சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  அப்போது தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “
    உக்ரைனில் இருந்து மத்திய அரசின் கடுமையான முயற்சியால் இங்கு திரும்பி உள்ளனர். மாணவி 6ம் ஆண்டு படித்து கொண்டு உள்ளார். இன்னும் 2 மாதத்தில் படிப்பை முடித்து மருத்துவர் ஆகி இருப்பார். துர்திஷ்டவசமாக போர் வந்து விட்டது.  இன்னும் புதுச்சேரியை சேர்ந்த 23 மாணவர்கள் உள்ளனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Also Read: உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறிவிட்டனர் -மத்திய அரசு விளக்கம்

    புதுச்சேரி அரசாங்கம் வெளியுறவு துறையுடன் தொடர்பு கொண்டு உள்ளது. பிரதமருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 26 விமானங்களுக்கு மேல் இயக்கப்பட்டு கொண்டு உள்ளது. 4 மத்திய அமைச்சர்கள் இந்தியர்கள் மீட்டெடுக்க வேண்டும் என்று சென்று உள்ளனர்.  ஆப்ரேஷன் கங்கா திட்டம் மனிதாபிமானத்துடன் இந்தியர்கள் யாரும் விடுபட்டு விட கூடாது என்ற நிலையில் இயங்கி கொண்டு இருப்பது மன நிம்மதியை தருகிறது. ஆனால் போர் சூழல் இருப்பதால் கவலை அளிக்கிறது.

    Also Read: உக்ரைனில் தண்ணீர் உணவின்றி பதுங்கு குழியில் தவிக்கும் மகன் - தமிழக அரசுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை

    எந்த சூழல் ஏற்பட்டாலும் பாரத தேசத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மீட்டெடுக்க வேண்டும். எல்லாரும் பத்திரமாக வந்தால் தான் மனது நிம்மதி அடையும்.  மத்திய அரசோடு இணைந்து மாநில அரசுகளும் மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறினார். மாணவி ரோஜா சிவமணி கூறுகையில், உக்ரைனில் உள்ள எல்லாரும் வந்தால் மன நிம்மதியாக இருக்கும் என்றார்.

    செய்தியாளர்: சுரேஷ் 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Dr tamilisai soundararajan, Medical Students, Puducherry, Russia, Russia - Ukraine, Tamilnadu

    அடுத்த செய்தி