நாளை முதல் சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்கலாம் - ஆண்களுக்கு மட்டும் கட்டுப்பாடு

மாதிரி படம்

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டது. புறநகர் ரயில்களில் அரசு பணியாளர்கள் மற்றும் உரிய அனுமதி கடிதம் வைத்திருந்தவர்கள் மட்டுமே பயணித்து வந்தனர்.

  இந்நிலையில் நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் எந்த காரணத்திற்காவும் பயணம் செய்யலாம். ரிட்டர்ன் டிக்கெட் அவர்களுக்கு வழங்கப்படும். இதேப்போன்று 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் பயணிக்கலாம்.

  Also Read : ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ - எதிர்க்கட்சியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

  புறநகர் ரயில் சேவையில் ஆண் பயணிகள் நான் பீக் நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதி என்றும் அவர்களுக்கு ரிட்டர்ன் டிக்கெட் கிடையாது என்று அறிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசு பணியாளர்கள் புற நகர் சேவையை எப்போதும் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். தனியார் அலுவலக ஊழியர்கள் அனுமதி கடிதம் மற்றும் ஐடி கார்டு காண்பித்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

  ரயிலில் முன்பதிவு செய்து வருபவர்களுக்கு புறநகர் சேவைக்கான டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களுக்கு வருபவர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் இல்லையென்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

  Also Read : உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும் - நீதிமன்றம் கருத்து

  மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கூட்டம் இல்லாமல் பயணிப்பது, காய்ச்சல், சளி, இறுமல் இருப்பவர்கள் புறநகர் ரயில் சேவையை தவிர்க்க வேண்டுமென்றும் தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: