• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும் - வானிலை மையம் எச்சரிக்கை

சென்னையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும் - வானிலை மையம் எச்சரிக்கை

சென்னையில் இன்று அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • Share this:
    சென்னையில் 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும், அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    நேற்று நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்பொழுது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கடந்து செல்லும்.

    இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் தரைக்காற்று 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.

    விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும், அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: