தனது கணவர் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்து சம்பாதித்ததாகவும், தற்போது யூ டியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனது யூடியூப் சேனலில் அவற்றை பதிவேற்றி பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்தி பேசியதால் யூடியூபர் மதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மதனின் மனைவி கிருத்திகா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் விசாரணையில் ஆபாசமாக பேசியதை பதிவேற்றியதன் மூலம் அதிக பார்வையாளர்களை ஈர்ப்பது, அதன் மூலம் கோடி கணக்கில் வருவாய் ஈட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் மதனின் மனைவி கிருத்திகா கை குழந்தையுடன் இருந்ததால் பிணை வழங்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதே வேளையில் பப்ஜி மதன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது, இந்த நிலையில் மதனை ஒரு வருடம் பிணையில் வர முடியாத வகையில் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் வைக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் யூடியூபர் மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அறியாத, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா சென்னை காவல் ஆணையரை சந்தித்து தனது தரப்பு விளக்கங்களை சொல்வதற்காக காவல் ஆணையர் அலுவலகம் வந்தார். சென்னை காவல் ஆணையரகம் வந்த பின்புதான் தனது கணவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அறிந்து காவல் ஆணையரை சந்திக்காமல் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, தனது கணவர் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த பப்ஜி கேம் விளையாட வில்லை எனவும் அவர் விளையாண்டது கொரியன் வெர்ஷன் பப்ஜி கேம் எனவும் தெரிவித்த கிருத்திகா, தனது கணவரை பற்றி வேண்டுமென்றே நெகட்டிவ் கருத்துகள் பரப்பி வருவதாகவும் கடந்த மூன்று வருடமாக தனது கணவர் பப்ஜி கேம் விளையாண்டு வருவதாகவும் இதற்காக அவர் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்தும், நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி வந்ததாகவும் தெரிவித்தார்.
காவல்துறை கூறியது போல் தங்களிடம் 2 சொகுசு பங்களாக்கள் மற்றும் 2 சொகுசு கார்கள் இல்லை எனவும் கூறினார். மேலும், தங்களிடம் இருப்பது ஒரேயொரு ஆடி கார் மட்டுமே என்றும் அதுவும் சொகுசு கார் இல்லை என்றும் அவர் கூறியது பத்திரிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்தது.
காவல்துறை தங்களின் யூடியூப் பக்கத்தை முடக்கி உள்ளதாகவும் அதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்த கிருத்திகா, தான் பப்ஜி கேம் விளையாடவில்லை எனவும் தனது கணவர் பப்ஜி கேமில் ஆபாசமாக தானாக பேசவில்லை எனவும் அவரை நான்கு நபர்கள் சேர்ந்து ட்ரிகர் செய்து பேச வைத்ததாகவும் கூறினார். காவல்துறையின் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.