Home /News /tamil-nadu /

PSBB | அடுத்தடுத்து 40 மாணவிகள் குற்றச்சாட்டு... பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே நடந்ததா?

PSBB | அடுத்தடுத்து 40 மாணவிகள் குற்றச்சாட்டு... பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே நடந்ததா?

PSBB | அடுத்தடுத்து 40 மாணவிகள் குற்றச்சாட்டு... பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே நடந்ததா?

பள்ளியில் நடந்து வரும் ஆன்லைன் வகுப்பிற்கு யார் கண்காணிப்பாளர்? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு பள்ளி முதல்வரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பள்ளி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது குறித்த விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். இந்த வழக்கில் போலீஸ் விசாரணைக்குப் பின் மேலும் பலர் சிக்குவார்களா? விசாரணையில் வெளியான தகவல்கள் என்ன?

    பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக 40 மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். இதில் 15 மாணவிகள் வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. பள்ளிகள் பாலியல் விவகாரங்களைக் கண்டுகொள்ளாதது ஏன்? பாதிக்கப்பட்ட அத்தனை மாணவிகளுக்கும் நீதி கிடைக்குமா?

    சென்னை கேகே நகர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில், பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை அசோக் நகர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    ராஜகோபாலான 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அசோக் நகர் மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல்களை அனுப்பும்படி காவல்துறை கேட்டு கொண்டது.

    அதன்படி சுமார் 40 மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் வாட்ஸ் ஆப் மூலமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அனுப்பி உள்ளனர். அதில் 15 மாணவிகள் தமிழகத்தின் பிற பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

    அந்த தகவல்களை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு காவல்துணை ஆணையர் ஜெயலட்சுமி அனுப்பியுள்ளார். அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் மேசேஜ்களை ராஜகோபாலன் அனுப்பியது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே நடந்ததா? என்பது குறித்து, பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரிடம் செவ்வாய்கிழமை அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம், பெற்றோர் புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? புகாரின் உண்மை இருப்பது தெரிந்தும் பள்ளி நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்காமல் விட்டார்கள்? என்பன போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர்.

    Also read: சிவகார்த்திகேயன் தந்தையின் பெயரை தவறுதலாக கூறிவிட்டேன்; வருத்தம் தெரிவித்த எச்.ராஜா!

    இந்நிலையில் புதன்கிழமை காலை பள்ளி முதல்வரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி காலை 10.25 மணியளவில் ஆஜரான அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றதுடன் அதனை வீடியோ பதிவும் செய்தனர்.

    பள்ளியில் நடந்து வரும் ஆன்லைன் வகுப்பிற்கு யார் கண்காணிப்பாளர்? பள்ளி ஆசிரியர் மீது ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு பள்ளி முதல்வரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

    மேலும், ராஜகோபாலனிடம் கைது செய்யப்பட்ட நாள் அன்று நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 3 பேருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

    எனவே ஆன்லைன் வகுப்பை கண்காணிப்பது யார்? ஒருங்கிணைப்பது? யார் என்பது தொடர்பான விசாரணையையும் காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    விஸ்ரூபம் எடுத்துவரும் தனியார் பள்ளி பாலியல் விவகாரம் அடுத்தடுத்து கிளைவிரித்து பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிக் கொண்டு வருகிறது. இதில் சிக்குபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்களா?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: PSBB School, Sexual harassment

    அடுத்த செய்தி