நடந்த முடிந்த தேர்தலில் 15,000 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார்கள் அதை திரும்பத் பெற வேண்டும் என்பதற்காக தான் சொத்து வரியை உயர்த்தி இருக்கிறது திமுக என பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் விமர்சித்துள்ளார்.
சென்னை தியாகராஜ நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விவசாயத்துறையில் வேளாண் பெருமக்களுக்கு பாரத பிரதமர் மோடி செய்திருக்கிற திட்டங்களைப் பற்றியும் பலன்களைப் பற்றி விளக்கம் அளிக்கிறேன் என தொடங்கிய அவர் மத்திய அரசின் விவசாய காப்பீடு திட்டத்தில் இந்தியா முழுவதும் 75 லட்சம் மேல் பயன்பெற்று இருகிறார்கள் என்றும் குறிப்பாக தமிழகத்தில் விவசாய காப்பீடு மட்டும் 7846 கோடி ரூபாய் வழங்கபட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
Also Read: பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வி.பி.துரைசாமிக்கு பொதுச் செயலாளர் பதவி ?
தொடர்ந்து பேசிய அவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேரளாவில் ஒரு மாநாட்டில் பேசிய பொழுது கூட்டுறவு துறை மத்திய அரசு செயல்படுகிறது. அதிகார வெறியும் பாஜக செயல்படுகிறது என்று குறை கூறுகிறார் என்றும் ,மத்திய அரசு பார்த்து குறை சொல்லும் போது உங்கள் முதுகில் என்ன இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளவேண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு , நகராட்சி தேர்தல் முடிந்தவுடன் , எதற்கு சொத்துவரி ஏற்றினார்கள் ? என்று கேள்வி எழுப்பினார்.
Also Read: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் : சசிகலா வழக்கில் இன்று தீர்ப்பு
நடந்த முடிந்த தேர்தலில் 15,000 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார்கள் அதை திரும்பத் பெற வேண்டும் என்பதற்காக தான் சொத்து வரியை உயர்த்தி இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தவர் கிராமபுற அளவில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்ததான் நாங்கள் முனைப்பு காட்டி வருகிறோம் எனவும் கூறினார் தொடர்ந்து பேசிய அவர் நாங்கள் ஆளுநரை சந்தித்து புகாரளித்த பிறகு தான் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்த தவறுக்கு அவரை துறை மாற்றினார்கள் என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, DMK, MK Stalin, Politics, Property tax, Tamil News, Tamilnadu, TamilNadu Politics