Home /News /tamil-nadu /

சென்னையில் தனியார் மருத்துவமனை மேலாளர் ஊசி போட்டு தற்கொலை- காதல் விவகாரம் காரணமா?

சென்னையில் தனியார் மருத்துவமனை மேலாளர் ஊசி போட்டு தற்கொலை- காதல் விவகாரம் காரணமா?

தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

சென்னையில் தனியார் மருத்துவமனை மேலாளர் ஊசிபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறனர்.

சென்னை கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இயங்கி வரக்கூடிய தனியார் மருத்துவமனையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தவர் சந்தீப் மோகன்(29). கேரளாவை சேர்ந்த இவர் கடந்த 6 ஆண்டுகளாக அதே மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி அங்கு பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி சந்தீப் மோகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையிலேயே தனது அறையில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையின் செவிலியர் டீ கொடுப்பதற்காக சந்தீப் மோகன் அறைக்கு சென்ற போது கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்ற போது சந்தீப் மோகன் கையில் ஊசி ஒன்றுடன் சுய நினைவின்றி படுத்து கிடந்தார்.

மருத்துவர்கள் சந்தீப் மோகனை பரிசோதித்த போது இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கீழ்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தீப் மோகனின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை என வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23,443 பேருக்கு கொரோனா பாதிப்பு: 37,000-த்தைக் கடந்த மொத்த உயிரிழப்பு


முதற்கட்ட விசாரணையில் சந்தீப் மோகன் அதே மருத்துவமனையில் செவிலியர் ஒருவரை காதலித்து வந்ததும், காதல் விஷயம் மருத்துவமனைக்கு தெரியவந்ததால் இருவரையும் கடந்த 2 வருடத்திற்கு முன்பு பணியிலிருந்து நீக்கியது தெரியவந்தது. இதனையடுத்து சந்தீப் மோகன் வேறு மருத்துவமனையிலும், அவரது காதலி துபாயிலும் பணிப்புரிந்து வந்துள்ளனர். மீண்டும் சந்தீப் மோகன் கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள அதே தனியார் மருத்துவமனைக்கு பணிக்கு சேர்ந்துள்ளார்.


இந்த நிலையில் சந்தீப் மோகனுக்கு வேறொரு பெண்ணை அவரது பெற்றோர் நிச்சயம் செய்து வருகிற ஏப்ரல் மாதம் திருமணம் செய்துவைக்க இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தீப் மோகன் அவரது காதலியிடம் காதலை முறித்து கொள்ளலாம் எனக்கூறிய போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் துபாயில் உள்ள அவரது காதலியிடம், திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் மொபைல் நம்பர் கொடுத்து பேச சொன்னதாக கூறப்படுகிறது. துபாயில் பணிபுரிந்து வரும் சந்தீப் மோகனின் காதலி, நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணிடம் தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும் அதனால் நீ விலகி விடு எனக்கூறி இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் சந்தீப் மோகன் வீட்டுக்கும் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்கும் இடையே பிரச்சை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படும் சந்தீப் மோகன் இன்று காலை தனக்கு தானே ஊசிப்போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் இவரது நெருங்கிய நண்பரும் ராயபேட்டை அரசு மருத்துவமனை மருத்துவருமான மகேஷ்வரன் என்பவர் மைலாப்பூர் சவேரா ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டார் என்பதும் மேலும் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் மகேஷ்வரன் என்பவரும் சந்தீப் மோகன் போல ஊசியை செலுத்தி தற்கொலை செய்துக்கொண்டார் என்பதும் கீழ்பாக்கம் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

தற்கொலை செய்துகொண்ட சந்தீப் மோகன் காதல் பிரச்சனையில் தற்கொலை செய்துகொண்டாரா? தனது நண்பரும் மருத்துவருமான மகேஷ்வரன் தற்கொலைக்கும் இவரது தற்கொலைக்கும் காரணம் உள்ளதா? மேலும் விஷ ஊசி பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள்

அடுத்த செய்தி