• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • போஸ்ட் கோவிட் 'வார் ரூம்' சென்னை மாநகராட்சி புதிய முயற்சி!

போஸ்ட் கோவிட் 'வார் ரூம்' சென்னை மாநகராட்சி புதிய முயற்சி!

போஸ்ட் கோவிட் வார் ரூம் - சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

போஸ்ட் கோவிட் வார் ரூம் - சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியவர்களுக்கு 15 நாட்களுக்கு பின் அழைத்து உடல் நலம் குறைத்து விசாரிக்கின்றனர். அவர்களுக்கு ஏதேனும் அறிகுறி தென்பட்டால் அடுத்த 4 வாரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

  • Share this:
போஸ்ட் கோவிட் எனப்படும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் உடல்நிலையை 45 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்க புதிய குழுவினரை கொண்ட வார் ரூமை சென்னை மாநகராட்சி உருவாக்கி உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் சிலருக்கு தூக்கமின்மை, சுவாச கோளாறு, சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் தென்படுவதாக அறியப்பட்டுள்ளது. இதனை நீண்டகால கோவிட்-19 என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் தனிக்குழுவினர் செயல்பட தொடங்கி உள்ளனர். இதற்காக பயிற்சி பெற்ற 125 தன்னார்வலர்கள், மருத்துவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்கள் தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களிடம் தலை வலி, உடல் வலி, உடல் சோர்வு, காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சனை உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என்று கேட்டறிகின்றனர். உளவியல் ரீதியாகவும் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பதையும் அறிகின்றனர். அறிகுறிகள் இருக்குமாயின் தகவல் பின்தொடர்பு மைய  நிர்வாகி, தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனை பெற ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதுமட்டுமின்றி உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சந்தேகங்களுக்கு உணவியல் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுப் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும், வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மூலம் உதவிகளை பெற செய்வது போன்ற இயன்ற உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 4-5% பேருக்கு பிந்தைய பாதிப்புகள் இருப்பது தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்வதன் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

Also read: தமிழகத்தில் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு - இன்றைய பாதிப்பு நிலவரம்

சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியவர்களுக்கு 15 நாட்களுக்கு பின் அழைத்து உடல் நலம் குறைத்து விசாரிக்கின்றனர். அவர்களுக்கு ஏதேனும் அறிகுறி தென்பட்டால் அடுத்த 4 வாரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். நாள் ஒன்றுக்கு 3,500 முதல் 4,000 பேரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் தேவைகளை கேட்டறிவதாகவும், இதுவரை 34,000 பேரை தொடர்பு கொண்டதில், அதில் 20,000க்கும் மேற்ப்பட்டவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: