• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு

சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சாலை விபத்தில் காவலர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

  • Share this:
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் காவலர் மனோஜ்குமார். இவர் தனது குடும்பத்துடன் விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று, இரவு பணியை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக சைதாப்பேட்டை மேட்டுப்பாளையம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சரியாக 10 மணி அளவில் கோவிந்தன் சாலையில் உள்ள இந்தியன் பெட்ரோல் பங்க் எதிரில் வாகன விபத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த போக்குவரத்து உதவி ஆணையர் நடராஜன் மற்றும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளர் கமலா தேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்கு பதிவு செய்து, உயிரிழந்த காவலர் மனோஜ் குமாரின் உடலை உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டபோது விபத்து ஏற்படுத்திய வாகனம்> ஃபோர்டு எண்டோவர் வாகனம் என தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.



இந்த நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் மனோஜ்குமார் மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது சரியாக இந்தியன் பெட்ரோல் பங்க் எதிரே இருசக்கர வாகனம் சறுக்கி விட நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் எதிர்திசையில் வேகமாக வந்த ஃபோர்டு எண்டோவர் கார் காவலர் தலையில் ஏறி இறங்கி வேகமாக சென்று உள்ளது.

Also Read : கொழுந்தனார் கேட்ட கேள்வியால் கொதித்த அண்ணி.. மகனுடன் சேர்ந்து கொலை செய்த பயங்கரம்

இதனால் சம்பவ இடத்திலேயே காவலர் மனோஜ்குமார் தலை நசுங்கி உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்பவருடையது என தெரியவந்தது. நேற்று இரவு விபத்து நடக்கும்போது ஜீவானந்தம் தனது ஓட்டுனர் சந்தோஷ் என்பவருடன் சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவர் மீதும் விபத்து மூலம் மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இறந்த காவலர் மனோஜ் குமாரின் தந்தை தனபால் என்பவர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: