• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் ஒரே பேருந்தில் கூட்டமாக கோஷம் போட்டு சென்ற மாணவர்கள்- தனித்தனி பேருந்துகளில் பிரித்து அனுப்பிய காவல்துறை

சென்னையில் ஒரே பேருந்தில் கூட்டமாக கோஷம் போட்டு சென்ற மாணவர்கள்- தனித்தனி பேருந்துகளில் பிரித்து அனுப்பிய காவல்துறை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னை மாநகரப்பேருந்தில் கூட்டமாக கல்லூரிக்கு சென்ற மாணவர்களை, போலீசார் பிரித்து, தனித் தனி பேருந்துகளில் அனுப்பினர்.

  • Share this:
    சென்னையில் மாநகரப் பேருந்துகளில் மாணவர்கள் கலாட்டா செய்யும் சம்பவங்கள் வழக்கமானது. காலையில் நேரங்களில் அனைவரும் அலுவலகங்களுக்குச் செல்லும்போது இவர்கள் பேருந்துகளில் அலப்பறைச் செய்துகொண்டு செல்வார்கள். அதிலும், சென்னையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மாணவர்கள் ரூட் தல என்ற பெயரில் பிரச்னையில் ஈடுபடுவது, வன்முறைச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இந்தநிலையில், நேற்று அதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

    சென்னை பிராட்வேவில் இருந்து எம்.எம்.டி.ஏ காலனி வரை செல்லும் 15ஜி வழித்தடப் பேருந்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 45க்கும் அதிகமானோர் கூட்டமாக, ஆரவாரம் செய்தபடி சென்றனர். பேருந்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தை கடந்த போது, மாணவர்கள் எழுப்பிய சப்தத்தை கேட்ட ஆய்வாளர் வனிதா, மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் கல்லூரி அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக்கொண்டு, அவர்களை ஐந்து ஐந்து பேராக பிரித்து தனித்தனி பேருந்துகளில் கல்லூரிக்கு அனுப்பினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: