• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • சிறையில் ஸ்கெட்ச்.. ஜாமீனில் வந்து கூட்டாக கொள்ளையடிக்கும் கும்பல் - கொள்ளையர் சிக்கியது எப்படி?

சிறையில் ஸ்கெட்ச்.. ஜாமீனில் வந்து கூட்டாக கொள்ளையடிக்கும் கும்பல் - கொள்ளையர் சிக்கியது எப்படி?

கொள்ளை கும்பல்

கொள்ளை கும்பல்

சென்னை அண்ணாநகர் தனியார் ஆம்னி டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் கொள்ளை வழக்கில் பிரபல முன்னால் கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளி தினகரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் மெகா கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் திருடன் திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் தமிழகத்தில் மீண்டும் கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளனர்.

  சென்னை மேற்கு அண்ணாநகர் 18வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் இளங்கோவன் ( வயது 54 ) .தொழிலதிபரான இவர் சென்னை கோயம்பேட்டில் பாக்கியலட்சுமி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2-ம் தேதி இரவு மர்ம கும்பல் புகுந்து,பீரோவில் வைத்திருந்த 120 சவரன் நகைகள், 15லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர் .

  இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து . அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர் . பின்னர் திருமங்கலம் உதவி கமிஷனர் ரவிச்சந்திரன்,ஆய்வாளர்கள் ஜார்ஜ் மில்லர், சிபுகுமார் தலைமையில் 8 தனிபடையினர் மர்ம கும்பலை  தீவிரமாக  தேடிவந்தனர்.

  Also Read: கள்ளக் காதலால் தடம் மாறிய மனைவி.. பாசப் போராட்டம் நடத்தி மீட்ட கணவன் - கள்ளக்காதலனை எச்சரித்து அனுப்பிய போலீஸார்

  மேலும் , சமீபகாலமாக பல்வேறு சிறை களில் இருந்து வெளியே சென்ற குற்றவாளிகளின் செல்போன் எண்களையும் தீவிரமாக கண்காணித்தனர் . இந்நிலையில்,கடந்த 2 நாட்களுக்கு முன் சந்தேக நிலையில் இருந்த 5 பேரின் செல்போன் டவர்கள் ஒருவருடையது இருப்பதாக காட்டியது .

  இதைத்தொடர்ந்து  தனிப்படையினர் விரைந்து சென்று, அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண் உள்பட 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர், பின்னர் அவர்களை நேற்று அதிகாலை சென்னை திருமங்கலம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர் .

  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் , வேலூர் அடுத்த ஜோலார்பேட்டை பகுதியில் பிடிபட்ட 5 பேரையும் விசாரித்தோம் . இதில் திருநெல்வேலியை சேர்ந்த ரவுடி தினகரன் ( 35 ) மறைந்த கொள்ளையன் திருவாரூர் முருகனின் நெருங்கிய கூட்டாளி எனத் தெரியவந்தது .மேலும் கிருஷ்ணகிரியை சேர்ந்த ரவுடி சிவா ( 31 ) , திருப்பத்தூரை சேர்ந்த லோகேஷ் ( 25 ) , எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மோகன் ( 55 ) , அதே பகுதியை சேர்ந்த பெண் ராணி ( 48 ) எனத் தெரிய வந்தது.

  Also Read:  நண்பன் ஆன்மா சாந்தியடைய கொலை செய்தோம் - சிவகங்கை கொலையில் கைதான இளைஞர் வாக்குமூலம்

  இவர்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறையில் இருந்தபோது ,ரவுடி தினகரனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது . இதில் ரவுடி தினகரன் ஜாமீனில் வெளி வந்த நிலையில், கொளத்தூரில் உள்ள வீட்டுக்கு அடிக்கடி செல்லும்போது, திருமங்கலத்தில் தொழிலதிபர் இளங்கோவனின் வீட்டை நோட்டமிட்டு வந்திருக்கிறார். பின்னர் தனது சக 4 கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 2ம் தேதி மெகா கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் எனும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர் ,

  பிடிபட்ட 5 பேரிடம் இருந்தும் 62 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் , மீதமுள்ள 20 சவரன் நகை , 15 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் , 85 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை பங்கு போட்டு , கிடைத்த பணத்தை உல்லாசமாக செலவு செய்துள்ளனர்.

  செய்தியாளர்: கன்னியப்பன்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: