ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பல்லாவரத்தில் தொழிலாளி மீது தாக்குதல் - விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உட்பட 9 பேர் கைது

பல்லாவரத்தில் தொழிலாளி மீது தாக்குதல் - விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உட்பட 9 பேர் கைது

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உட்பட 9 பேர் கைது

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உட்பட 9 பேர் கைது

Vijay Makkal Iyakkam | சென்னை பல்லாவரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர், அன்சர்(எ)அணிஷ். இவர் விஜய் மக்கள் இயக்கம் பல்லாவரம் செங்கை (மேற்கு) மாவட்ட தொண்டரணி பொருளாளராக உள்ளார்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  பல்லாவரம் அருகே கூலி தொழிலாளியை கட்டி வைத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

  சென்னை பல்லாவரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர், அன்சர்(எ)அணிஷ். இவர் விஜய் மக்கள் இயக்கம் பல்லாவரம் செங்கை (மேற்கு) மாவட்ட தொண்டரணி பொருளாளராக உள்ளார்.

  அணிஷ் பல்லாவரம் பகுதியில் ஜஸ் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் பல்லாவரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக பாலாஜிக்கு கடையின் உரிமையாளர் அணிஷ் சரியாக ஊதியம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

  இந்த நிலையில், கடந்த முன்று நாட்களுக்கு முன்பு அணிஷின் கடையில் வேலை பார்த்து வந்த தொழிலாளிகளின் மூன்று செல்போன்கள் மற்றும் பணம் 10,500 காணாமல் போனதாக கூறப்படுகிறது.

  பாலாஜியும் மூன்று நாட்களாக வேலைக்கு வராததால் காணாமல் போன செல்போன், பணத்தை பாலாஜி தான் திருடி இருக்கக் கூடும் என்று கருதிய அணிஷ், தனது நண்பர்கள் 9 பேரைக் கூட்டிக் கொண்டு பல்லாவரம் அதன் சுற்றியுள்ள பகுதியில் தேடிவந்த நிலையில் பாலாஜி பம்மல் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

  உடனே பாலாஜியை பிடித்த அந்த கும்பல் மூன்று செல்போன் மற்றும் பணத்தை தர சொல்லி கேட்டுள்ளனர், அதற்கு செல்போன் பணத்தை எடுக்கவில்லை என கூறியும், செல்போன், பணத்தை தர சொல்லி பாலாஜியின் இரு கைகளையும் பின்னால் கட்டி உருட்டு கட்டையால் சரமாரியாக 9 பேரும் தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் பாலாஜி கிழே விழுந்ததும் அங்கிருந்து 9 பேரும் தப்பிச் சென்றார்.

  ரத்த வெள்ளத்தில் இருந்த பாலாஜியை பொதுமக்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு 8 தையல் போடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

  Also read... பணி நிரந்தரம் செய்யக்கோரி ரொட்டி பால் திட்ட ஊழியர்கள் தர்ணா

  விசாரணையில். விஜய் மக்கள் இயக்கம் பல்லாவரம் செங்கை (மேற்கு) மாவட்ட தொண்டரணி பொருளாளராக இருக்கும்

  அன்சர்(எ) அணிஷ் மற்றும் பல்லாவரம் பகுதியை சேர்ந்த அபிப் ரகுமான், மனோஜ், முகேஷ், ராஜேஷ், மாதவன், சரத், சீனு(எ) பாலகுமார், நிசார் அகமது, உட்பட 9 பேருரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர் - எஸ்.சுரேஷ்

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Crime News, Vijay makkal iyakkam