முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே ‘ரூட்டு கெத்து’: மாணவர்கள் மீது வழக்குப் பதிவு!

கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே ‘ரூட்டு கெத்து’: மாணவர்கள் மீது வழக்குப் பதிவு!

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

தமிழகத்தில் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் முதல் நாளிலேயே எந்த ரூட் சிறந்தது என்று போட்டுப்போட்டு ஊர்வலம் சென்றனர். இதனால் அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

  • Last Updated :

கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் ஊர்வலமாக சென்ற மாணவர்கள் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்தனர்.

கொரோனா தொற்று குறையத் தொடங்கியதையடுத்து தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  பள்ளிகளும் , முதலாமாண்டு தவிர்த்து பிற வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரிகள் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற  வேண்டும் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில்  நேற்று காலையில் முன்னாள் மாணவர்கள் மற்றும் இன்னாள் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர்  முன்னாள் மாணவர் ராமு என்பவரின் தலைமையில்  திருத்தணி ரூட்டுக்கு  ஜே, பச்சையப்பன் கல்லூரிக்கு ஜே என்று கோஷமிட்டப்பட்டி சாலையில் ஊர்வலமாக வந்துள்ளனர்.  பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் உள்ள பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்து  வகுப்பறைக்கு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்தால் சொந்த வீடு: வதந்தியால் அலைமோதிய கூட்டம்!

இதேபோல், பாரீஸ் மற்றும் கும்மிடிபூண்டியைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு மாணவர் தரணி என்பவரின் தலைமையில்  பாரீஸ் ரூட்டுக்கு ஜே என்று கோஷமிட்டப்படி ஊர்வலமாக கல்லூரிக்கு வந்துள்ளனர்.  ஆவடி பகுதியைச் சேர்ந்த 40 மாணவர்கள் முன்னாள் மாணவர் சங்கர் என்பவரின் தலைமையில் அவடி ரூட்டுக்கு ஜே என்று கோஷமிட்டப்பட்டி ஊர்வலமாக வந்து பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மேலும் படிக்க: சென்னை புறநகர் ரயில் சேவையில் ஆண்களுக்கான நேரக் கட்டுப்பாடு நீக்கம்!

கொரோனா தொற்றின் ஆபத்து முழுமையாக நீங்காத நிலையில், தங்களது ரூட்டு வலிமையை காட்டும் விதமாக மாணவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் வந்தது குறித்து காவல்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து, கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மாணவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Case, Pachayappa's college, Students