• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • போலீசுக்கு பயந்து கூவம் ஆற்றில் குதித்தவர் பலி.. 6 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட உடல்

போலீசுக்கு பயந்து கூவம் ஆற்றில் குதித்தவர் பலி.. 6 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்ட உடல்

கூவம் ஆற்றில் குதித்தவர் பலி

கூவம் ஆற்றில் குதித்தவர் பலி

சீட்டு விளையாடிய போது, போலீசார் வருவதை பார்த்து பயந்து தப்பி ஓடி கூவம் ஆற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலியானது  பட்டாபிராமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    சென்னை பட்டாபிராமில் கூலித்தொழிலாளி போலீசுக்கு பயந்து கூவம் ஆற்றில் குதித்தபோது செடிகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம்,  சோராஞ்சேரி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்தியவாணி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் சரவணன் தனது 7 நண்பர்களுடன் சுடுகாட்டில் சீட்டு விளையாடியுள்ளார். இதுகுறித்து பட்டாபிராம் போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது. இதனையடுத்து சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து வாகனத்தில் அங்கு வந்துள்ளனர்.

    போலீசாரைக் கண்டு பயந்து போன சரவணன் உள்ளிட்ட 6 நண்பர்கள் சீட்டுக்கட்டுகளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். இதில் சரவணன் உள்ளிட்ட இருவர் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள கூவம் ஆற்றில் போலீசாருக்கு பயந்து குதித்துள்ளார். இதில், அவர் ஆற்றில் உள்ள செடி கொடிகளில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த அவரது நண்பர் ஜெகன் அங்கிருந்து ஓடி வந்து கிராமத்தில் உள்ள உறவினர்கள், பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து, பொதுமக்கள் ஆவடி தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் தீயணைப்பு அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில்  வீரர்கள் அங்கு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், அவர்கள் படகு மூலம் ஆற்றில் இறங்கி சரவணனை தண்ணீரில் தேடினர்.

    மேலும், தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக தேடி சரவணனை உடலை மீட்டனர். உடலை மீட்டவுடன் உறவினர்கள் சரவணனின் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காமல் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: கன்னியப்பன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: