• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் அரசு நிவாரண முகாமில் தங்கியுள்ள 1 வயது குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடிய போலீசார்!

சென்னையில் அரசு நிவாரண முகாமில் தங்கியுள்ள 1 வயது குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடிய போலீசார்!

சென்னையில் அரசு நிவாரண முகாமில் தங்கியுள்ள ஒரு வயது பெண் குழந்தையின் பிறந்தநாளை, காவல்துறையினர் நெகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

  • Share this:
    கனமழை, பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது மனிதாபிமானமும், நேசமும் வெளிப்படுவது உண்டு. அந்தவகையில் காவலர்களின் பரபரப்பான பணிகளுக்கு இடையே, ஒரு வயது குழந்தையின் பிறந்தநாளை, காவலர்கள் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை துரைப்பாக்கம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்குவதற்காக, பெருங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசு நிவாரண முகாமை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் பலர் தங்கிவரும் சூழலில், பொதுமக்களின் தேவைகள் குறித்து துரைப்பாக்கம் காவல் நிலைய போலீசார், நிவாரண முகாமை பார்வையிட்டனர். அப்போது முகாமில் உள்ள மோனிகா என்ற ஒருவயது பெண் குழந்தைக்கு, பிறந்தநாள் என்பது காவல் உதவி ஆய்வாளரான ஜெய்கணேஷிற்கு தெரியவந்தது. இதனையடுத்து காவலர்கள் ஒன்றிணைந்து பெண் குழந்தைக்கு புத்தாடை, பலூன், கேக் மற்றும் சாக்லேட் வாங்கிக் கொடுத்தனர்.

    அதன்பின்னர் முகாமில் உள்ள அனைவரோடும், இணைந்து காவலர்கள் குழந்தை மோனிகாவின் பிறந்தநாளை, உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    காவல்துறையினரின் இடைவிடாத பணிகளுக்கு மத்தியில், இயன்றளவு மனிதநேயத்தை வெளிப்படுத்திய இச்சம்பவம், முகாமில் இருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: