Home /News /tamil-nadu /

யூரியாவை பொடி செய்து ஹெராயின் எனக்கூறி கோடிக்கணக்கில் விற்க முயற்சி- சென்னையில் 4 பேர் கைது

யூரியாவை பொடி செய்து ஹெராயின் எனக்கூறி கோடிக்கணக்கில் விற்க முயற்சி- சென்னையில் 4 பேர் கைது

யூரியா

யூரியா

யூரியாவை பொடி செய்து ஹெராயின் என்று கூறி விற்க முயன்ற நான்கு பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

    விவசாயத்திற்கு பயன்படுத்தும் யூரியாவை பொடிசெய்து ஹெராயின் எனக்கூறி கோடிக்கணக்கில் விற்பனை செய்ய முற்பட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கத்தார் நாட்டில் பணிபுரியும் சையத் என்பவரிடம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபர்கள் தங்களிடம் ஹெராயின் போதைப் பொருள் இருப்பதாக கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளனர். இதனையடுத்து சென்னை மாதவரத்தில் தான் சொல்லும் கடைக்குச் சென்று போதைப்பொருளுடன் காத்திருக்குமாறும் தான் அனுப்பும் நபர்கள் வந்து பணத்தை கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்வதாகவும் கத்தாரில் பணிபுரியும் சையத் கூறியுள்ளார்.

    போதைப் பொருளுடன் மாதாவரம் 7 டிரஸ் ஷாப்- ல் (7 dress shop)மர்ம நபர்கள் சிலர் காத்திருந்தபோது கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து அங்கு சென்று அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்நபர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜா (40), அருண்குமார்(31), தமீம் அன்சாரி(27), முகமது சபி(29) என்பது தெரியவந்தது.

    மதுரை-ஷார்ஜா விமான சேவை நிறுத்தம்: கொழும்புக்கு தொடக்கம் - ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு

    இவர்களிடமிருந்த ஒரு கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்து ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்தபோது, அவை உண்மையான ஹெராயின் போதைப் பொருள் இல்லை என்பதும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் யூரியாவை பொடிசெய்து ஹெராயின் எனக்கூறி மோசடி செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து 4 நபர்களையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Chennai, Crime News, Police

    அடுத்த செய்தி