ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் லிஃப்டில் தனியாக வந்த பெண் முன் திடீரென நிர்வாணமாக நின்ற டெலிவரி பாய்...

சென்னையில் லிஃப்டில் தனியாக வந்த பெண் முன் திடீரென நிர்வாணமாக நின்ற டெலிவரி பாய்...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சென்னையில் லிப்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை, அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து மிரட்டுதல், பொது இடங்களில் பாலியல் சீண்டல் என பல்வேறு வகையான குற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. அப்படி சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள பிரின்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் காய்கறி டெலிவரி செய்வதற்காக சூளையைச் சேர்ந்த விக்னேஷ்(24) என்ற இளைஞர் வந்துள்ளார். ஆறாவது தளத்தில் உள்ள வீட்டில் காய்கறிகளை டெலிவரி செய்துவிட்டு லிஃப்டில் வரும்போது வீட்டு வேலை செய்துவரும் பெண் லிப்டில் ஏறி உள்ளார்.

இருவர் மட்டுமே தனியாக இருந்ததால் விக்னேஷ் என்ற அந்த இளைஞர் தனது ஆடைகளை முழுவதும் கழட்டி ஆபாச செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டு உரிமையாளரின் புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Crime News