Home /News /tamil-nadu /

பல்வேறு குற்றப் பின்னணியுடைய சொமொட்டோ டெலிவரி பாய் வெட்டிப்படுகொலை - போலீசார் தீவிர விசாரணை!

பல்வேறு குற்றப் பின்னணியுடைய சொமொட்டோ டெலிவரி பாய் வெட்டிப்படுகொலை - போலீசார் தீவிர விசாரணை!

கொலை செய்யப்பட்ட அஜித்

கொலை செய்யப்பட்ட அஜித்

கடந்த சில மாதங்களாக சொமாட்டோ நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றிக்கொண்டே அஜித் குமார் பைக் திருட்டில் ஈட்டுபட்டு வந்ததாகவும் மெரினா போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
பல்வேறு குற்றப் பின்னணியுடைய சொமொட்டோ டெலிவரி பாய் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மெரினா பகுதியில் உள்ள நடுகுப்பம் 3-வது தெருவை சேர்ந்தவர் அஜித் குமார்(24). இவர் சொமோட்டாவில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்த அஜித் குமார் தனது இருசக்கர  வாகனத்தை வீட்டில் நிறுத்தி விட்டு வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த சில மர்ம நபர்கள் அஜித்குமாரின் தலை, கழுத்து, உடல் பகுதிகளை வெட்டி தலையை கொடூரமாக சிதைத்து விட்டு தப்பியோடியுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது அஜித்குமார் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்துக் கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஜித் குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசாரின் தேடுதல் வேட்டையில் அஜித்குமாரை வெட்டிப் படுகொலை செய்த திருவல்லிக்கேணி நீலம் பாஷா தெருவைச் சேர்ந்த சலீம், ஆகாஷ், ரிஸ்வான்,மாட்டான் குப்பம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், டாக்டர் நடேசன் சாலை பகுதியைச் சேர்ந்த ரியாஷ் பாஷா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட சொமாட்டோ டெலிவரி பாயான அஜித்குமார் மீது சென்னையில் மெரினா, ராயபேட்டை, மைலாபூர், ஜாம்பஜார், வடபழனி, வடக்கு கடற்கரை, திருவொற்றியூர், நீலாங்கரை ஆகிய காவல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் செயின் பறிப்பு, பைக் திருட்டு, பணம் பறிப்பு, அடிதடி என 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் இதனால் பலமுறை இவர் சிறை சென்று வந்ததிருப்பதும் தெரியவந்தது.

Also read... நகைக்கடன் தள்ளுபடி செய்த அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு வாபஸ்!

கடந்த சில மாதங்களாக சொமாட்டோ நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றிக்கொண்டே அஜித் குமார் பைக் திருட்டில் ஈட்டுபட்டு வந்ததாகவும் மெரினா போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 5 நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டபோது, அஜித்குமார் கஞ்சா போதையில் தன்னை ஒரு ரவுடி எனக்கூறி அப்பகுதி இளைஞர்களிடம் தகறாரில் ஈடுப்பட்டு வந்ததாகவும், அதேபோல சில தினங்களுக்கு முன் அஜித் குமார், கொலை செய்த நபர்களிடம் கஞ்சா போதையில் சண்டை போட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதனால் கோபம் கொண்ட நபர்கள் அஜித்குமாரை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர் விசாரணை செய்து வரும் மெரினா போலீசார் தலைமறைவாக உள்ள அதே பகுதியச் சேர்ந்த கார்த்திக், தமிழரசன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime News

அடுத்த செய்தி