Home /News /tamil-nadu /

சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி

சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி

அறிவிப்பு

அறிவிப்பு

கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி விரைவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  newsசென்னையில், தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட 9 இடங்களில் இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

  கொரோனா 3ஆவது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவது தொடர்ந்து காணப்பட்டால் அந்தந்த மாவட்ட அட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், போலீசார் அந்த பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி முடிவு செய்யலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 30ஆம் தேதி அறிவித்தார்.

  அதனைத் தொடர்ந்து, உடனடியாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ஜூலை 30ஆம் தேதி நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை; புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை; ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை; பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

  இதேபோல, ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை; அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை; ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை; கொத்தவால் சாவடி மார்க்கெட் பகுதி என மொத்தம் 9 இடங்களில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இன்று காலை 6 மணி வரை செயல்பட தடை விதிக்கப்பட்டது.

  இந்நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான வணிக வளாகங்கள் இருக்கும் 9 இடங்களில் கடந்த ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்டு 9ஆம் தேதி காலை 6 மணி வரை மூட உத்தரவிட்டு இருந்தோம். அந்த பகுதி வியாபாரிகள் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று எங்களிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினோம்.

  Must Read : கேரளாவில் சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் அனுமதி - சமூக ஆர்வலர்கள் கண்டனம்

  இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று முதல் கடைகளை திறக்க வணிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிதல், நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும், கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி விரைவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடை உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத கடைகளை மூடி சீல் வைக்கவும் அந்தந்த மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Chennai corporation, CoronaVirus, Covid-19, News On Instagram, Shopping malls

  அடுத்த செய்தி