Home /News /tamil-nadu /

கோயம்பேடு மார்க்கெட்டில் வெளியூர் திடீர் வியாபாரிகள் : கரும்பு, மஞ்சள் நேரடி விற்பனைக்கு அனுமதி

கோயம்பேடு மார்க்கெட்டில் வெளியூர் திடீர் வியாபாரிகள் : கரும்பு, மஞ்சள் நேரடி விற்பனைக்கு அனுமதி

கரும்பு விற்பனை

கரும்பு விற்பனை

Koyambedu Market : சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெளியூர் வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் சிறப்பு விற்பனை பொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கரும்பு மஞ்சள் ஆகியவற்றை வாகனத்துக்கு 2000 முதல் 2500 வரை பெற்றுக்கொண்டு வெளியூர் திடீர் வியாபாரிகளுக்கு நேரடி விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ள CMDA Market Management Committee (MMC) நிர்வாகம். இது, கோயம்பேடு உரிமம் பெற்ற ஒழுங்கு முறை விற்பனைக்கூட வியாபாரிகள்இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா பரவலை காரணம் காட்டி, சென்னை கோயம்பேடு அண்ணா காய்கனி சந்தையில் பொங்கல் விழா நெருங்குவதை முன்னிட்டு, விழாக்கால சிறப்பு சந்தைக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி உரிமம் பெற்ற ஒழுங்கு முறை விற்பனை கூட வியாபாரிகளை முறையாக அழைத்து பொது ஏலம் நடத்தாமல். புதிய வெளியூர் வியாபாரிகளுக்கு ஒரு வாகனத்துக்கு 2000 முதல் 2500 வரை பெற்றுக்கொண்டு கோயம்பேடு CMDA MMC அங்காடி நிர்வாகம் சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது.

    மேலும்,  CMDA MMC நிர்வாக அங்காடி யின் இந்த செயல் கோயம்பேடு ஒழுங்கு முறை விற்பனை வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியூரிலிருந்து சிறிய இலகு ரக வாகனங்களிலேயே வைத்து கருவேப்பிலை கொத்தமல்லி விற்பனை அங்காடி மையத்தில் வைத்து கரும்பு மஞ்சள் ஆகியவற்றை வெளியூர் வியாபாரிகள் வியாபாரம் செய்வதால் கோயம்பேடு வியாபாரிகள் பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் அவர்களிடம் விசாரித்த பொழுது, ஏலம் நடத்தாமல் கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் உள்ள வியாபாரிகள் விழாக்காலங்களில் வியாபாரம் செய்ய விடாமல் கல்லா கட்டும் CMDA MMC அங்காடி நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்பதாக வியாபாரிகள் சங்கத்தினர் வேதனையுடன் கூறுகின்றனர்.

    Read More : வரும் 16ஆம் தேதி பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கப்படாது

    இது இதுபற்றி MMC நிர்வாக அங்காடி குழு அதிகாரி சாந்தி அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, வருடா வருடம் 10% சதவிகிதம் தொகையை உயர்த்தி வருவதாகவும் இந்த முறை 20% சதவீதம் உயர்த்தி உள்ளதால் வியாபாரிகள் யாரும் டெண்டர் எடுக்க முன்வராததால் கோயம்பேடு அங்காடி நிர்வாக குழுவினர்  முடிவு எடுத்து,  டெண்டர் விலை நிர்ணயம் செய்து சிறப்பு அங்காடிக்கு அனுமதி வழங்கியதாக கூறினார்.

    மஞ்சள் விற்பனை


    Must Read : பொங்கலுக்கு பின் முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

    மேலும், இதனால் வியாபாரிகள் கரும்பு மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் சிறப்பு விற்பனை பொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

    செய்தியாளர் : கன்னியப்பன், 
    Published by:Suresh V
    First published:

    Tags: Koyambedu Market, Pongal

    அடுத்த செய்தி