கொரோனா நோய் தொடர் பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு தமிழக அரசு நேற்று முதல் அமல் படுத்தி உள்ளது இதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கப்படாது என அறிவித்துள்ள நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 6 நுழைவாயில்களும் மூடப்பட்டு , பயணிகளை போலீசார் வெளியேற்றினர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 10 மணிக்கு மேல் பேருந்து இயக்கப்படாததால் , சென்னையின் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியமால் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே அதிகாலை வரை காத்திருந்தனர். பலர் பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கினர்.
வெளியூர்களுக்கு செல்ல இரவு நேரங்களில் நூற்றுகணக்கான பேருந்துகள் தினசரி இயக்கபடும் என்று அறிவித்திருந்த நிலையில், இரவு நேர ஊரடங்கால் பேருந்துகள் இயக்கபடமால் நிறுத்தி வைக்கப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் படிக்க... புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Koyambedu, Night Curfew