Home /News /tamil-nadu /

சாலையோர மனிதர்கள், விலங்குகளின் பசியை போக்கிவரும் உயர்ந்த உள்ளங்கள்!

சாலையோர மனிதர்கள், விலங்குகளின் பசியை போக்கிவரும் உயர்ந்த உள்ளங்கள்!

தலைநகர் சென்னையில் ஆதரவில்லாமல் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும், விலங்குகளுக்கும் அன்றாடம் பலர் உணவு கொடுத்து வருவதால் இன்னமும் அவர்கள் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்

தலைநகர் சென்னையில் ஆதரவில்லாமல் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும், விலங்குகளுக்கும் அன்றாடம் பலர் உணவு கொடுத்து வருவதால் இன்னமும் அவர்கள் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்

தலைநகர் சென்னையில் ஆதரவில்லாமல் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும், விலங்குகளுக்கும் அன்றாடம் பலர் உணவு கொடுத்து வருவதால் இன்னமும் அவர்கள் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்

  • Last Updated :
தலைநகர் சென்னையில் ஆதரவில்லாமல் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும், விலங்குகளுக்கும் அன்றாடம் பலர் உணவு கொடுத்து வருவதால் இன்னமும் அவர்கள் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின்  தலைநகர் சென்னையில் பல இடங்களிலும் தெருவோரங்களில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆதரவற்றவர்களாக நடைபாதைகளில் வாழ்வை கழித்து வருகிறார்கள். இவர்களுக்கான உணவு என்பது சாலையோர கடைகளை நம்பித்தான் இருந்தன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டதால், இவர்களின் அடுத்தவேளை உணவு என்பதே கேள்விக்குறியானது.  ஊரடங்கு காலத்தில் கடைகள் இல்லாததால் பல்வேறு நபர்கள் உணவு கொடுத்து வருகிறார்கள்.அந்த வகையில் நுங்கம்பாக்கம் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் உள்ளிட்ட பொழுதுகளில் சாலையோரம் வசிக்கும் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு தினம்தோறும் மதிய உணவு வழங்கிவருகிறார் ரீனுகுமார்.

அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து அவித்த முட்டையுடன் கூடிய சுவையான உணவு தயாரித்து எடுத்து வந்து ஏழைகளுக்கு பரிமாறி வருகின்றனர்.நோய்தொற்று ஏற்படாமல் இருக்க மூன்று பேரும் முழு கவச உடையுடன் இதனை செய்து வருகிறார்கள். ஊரடங்கு எத்தனை நாட்கள் நீடித்தாலும் இந்த பணி தொடரும் என்கிறார்கள்.

இதேபோல், சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் ஐடி ஊழியர் விஜயகுமார் என்பவர் சுமார் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் 30க்கும் மேற்பட்ட பூனைகளுக்கு கடந்த பல வருடங்களாக உணவு சமைத்து கொடுத்து வருகிறார். சாலையோரம் வசிக்கும் நாய்களும் பூனைகளும் உணவு கிடைக்காமல் திண்டாட கூடாது என்பதற்காக இந்த முயற்சியில் தாம் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்.

இவர் தனது மாத சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காகவே தொடர்ந்து செலவு செய்து வருவதாகவும் இதனால் மிகுந்த மன நிறைவு ஏற்படுவதாகவும் கூறுகிறார். சிக்கன் சூப், தயிர் சாதம், சிக்கன் கலந்த சாதம் என பார்த்து பார்த்து கொடுத்து பரிமாறி வருகிறார்.

சென்னை மெரினாவில் கலங்கரை விளக்கம் தொடங்கி உழைப்பாளர் சிலை வரையிலும் இருக்கக்கூடிய நீண்ட நெடிய கடற்கரைப் பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆதரவற்ற நாய்கள் இருக்கின்றன. இவைகள் உணவில்லாமல் தவிப்பதை தடுப்பதற்காக  கொரோனா பரவத் தொடங்கிய காலத்தில் இருந்து தினந்தோறும் உணவு சமைத்து எடுத்து வந்து பரிமாறி வருகிறார் பிரவீன் என்ற இளைஞர்.

முதலில் தன்னந்தனியாக இந்த பணியை செய்த இவருக்கு தற்போது நண்பர்கள் பலரின் ஒத்துழைப்பும் கிடைத்திருக்கிறது. இரவு நேரங்களில் சாப்பாடு எடுத்து வந்து இவர் கைதட்டினால் நாய்கள் இவரை தேடி வருகின்றன. அவர்களுக்கு பருப்பு சாதம்,சிக்கன் கலந்த சாதம், பெடிகிரி என கொடுத்து மகிழ்கிறார் பிரவீன். கல்லூரி மாணவி தமிழ் என்பவரும் தற்போது இந்த பணியில் ஈடுபட்டு இருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கிறார்.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த அபர்ணா , கொரோனா பாதித்தவர்களுக்கு தன்னால் முடிந்த உணவை சமைத்து வழங்கி வருகிறார்.  கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டில் இருக்கும் போது அவர்களுக்கு தேவையான சாப்பாடு கிடைப்பதில்லை என கூறும் அபர்ணா,  அவர்களுக்கான உணவை தன் வீட்டில் சமைத்து தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என பல பகுதிகளுக்கும் சென்று இலவசமாகக் கொடுத்து வருகிறார்.

மேலும் படிக்க.. ஆதிவாசி மக்களுக்காக உயிரை பணயம் வைத்து உதவும் மருத்துவர்

நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு  சமைத்து கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அபர்ணா தெரிவிக்கிறார். இவரும் இவரது கணவரும் சேர்ந்து இந்த பணியை செய்தாலும் கூட இந்த உணவைக் கொண்டு சென்று பரிமாறுவதற்கு ஊரடங்கு காலம் என்பதால் போலீசார் பல இடங்களில் தடை விதிப்பதாகவும் இதனை பரிசீலித்து தடையில்லாமல் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இப்படி ஈர நெஞ்சம் கொண்ட இதயங்கள் சிலரால் பற்றி எரியும் பசித் தீ அணைக்கப்படுகிறது. சுயநல வட்டத்தைத் தாண்டி பொதுநல நோக்கில் பயணிக்கிறது இவர்களது வாழ்வு. இவர்களைப் போன்றவர்களிடம் நம்மால் இயன்றதை கொடுத்து உதவினால் இன்னும் பலரது வயிறும் மனமும் நிறையும்.

செய்தியாளர்: செல்வகுமார்உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published:

Tags: Chennai, Corona

அடுத்த செய்தி