• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புரட்டாசி விரதம் ஓவர்.. ஓவர்.. காசிமேட்டுக்கு படையெடுக்கும் அசைவ பிரியர்கள்

புரட்டாசி விரதம் ஓவர்.. ஓவர்.. காசிமேட்டுக்கு படையெடுக்கும் அசைவ பிரியர்கள்

காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

புரட்டாசி மாதம் இன்றுடன் நிறைவு பெறுவதையடுத்து மீன்களை வாங்க மக்கள் காசிமேட்டுக்கு மக்கள் படையெடுக்கின்றனர்.

  • Share this:
    கடந்த ஒரு மாத காலமாக விரதத்தில் இருந்த பொதுமக்கள் இன்றுடன் புரட்டாசி மாதம் நிறைவு பெறுவதையொட்டி காசிமேடு கடற்கரையில் மீன்களை வாங்குவதற்காக வருகை புரிந்துள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை என்றாலே விடுமுறை தினத்தில் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கி உண்பது வழக்கம். இந்த நிலையில் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருப்பதால் அசைவம் உண்ணாமல் இருப்பவர்கள் புரட்டாசி மாதம் முடிந்து மீன் கறி சாப்பிடுவது வழக்கம். ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்று பரவலால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதிக்கு பொதுமக்கள் அனுமதி இல்லாமல் வியாபாரிகள் மட்டும் அனுமதி இருந்த நிலையில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டு மக்களே வாங்குவதற்காக வருகை புரிந்துள்ளனர்.

    மீன்களின் வரத்து கணிசமாக உயர்ந்து நல்ல விலையில் அதிக அளவில் மீன்கள் காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இருந்தபோதிலும் மீன்கள் அதிகளவில் கிடைத்திருப்பதால் எதிர்பார்த்த அளவிற்கு பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் விற்பனை நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இன்றுடன் நிறைவு பெறும் புரட்டாசியைடுத்து நாளை அதிக அளவில் பொதுமக்கள் காசிமேடு மீன்பிடி கடற்கரைப் பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை நிலவரம்:

    சங்கரா ரூ.3000 கூடை
    கிலோ 200 - 250

    சீலா ரூ. 4000 கூடை
    கிலோ 250

    வஞ்சீரம் - ரூ500 -600கிலோ

    வவ்வால் - ரூ.8000 கூடை
    கிலோ 400 - 450

    பாறை - ரூ.200 250 (கிலோ)

    நண்டு - 300(கிலோ)

    இறால் - 350(கிலோ) ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    செய்தியாளர்: அசோக் (வடசென்னை)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: