Home /News /tamil-nadu /

சென்னை அப்பார்ட்மெண்ட் இடிந்த பகுதியில் உள்ள 336 வீடுகளில் இருந்து வெளியேறும் மக்கள்... எங்கே செல்வது என தெரியாமல் தவிப்பு

சென்னை அப்பார்ட்மெண்ட் இடிந்த பகுதியில் உள்ள 336 வீடுகளில் இருந்து வெளியேறும் மக்கள்... எங்கே செல்வது என தெரியாமல் தவிப்பு

இடிந்த கட்டிடம்

இடிந்த கட்டிடம்

குடியிருப்பு ஆய்வு செய்ய இருப்பதால் மூன்று பிளாக்குகளில் உள்ள 72 வீடுகளில் வசிக்கும் மக்கள், அங்கிருந்து காலி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வல்லுநர் குழு ஆய்வு செய்ய இருப்பதால், உடைமைகளுடன் வெளியேறிய மக்கள் எங்கே செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    திருவொற்றியூர் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் D பிளாக்கில் உள்ள 24 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதையடுத்து முதலமைச்சர் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டன. நேற்று இடிந்த பகுதிகளை ஆய்வு செய்த வல்லுநர் குழுவினர், இன்று அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் மற்றவீடுகளின் நிலை குறித்தும் பார்வையிடுகின்றனர்.

    மொத்தம் 336 வீடுகள் இருக்கும் நிலையில், 18 வீடுகளின் தரம் பற்றிய மாதிரிகளை அவர்கள் சேகரிக்கின்றனர். களஆய்வு செய்ய இருப்பதால் மூன்று பிளாக்குகளில் உள்ள 72 வீடுகளில் வசிக்கும் மக்கள், அங்கிருந்து காலி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள மக்கள், தங்கள் உடைமைகளுடன் எங்கே செல்வதென தெரியாமல் தவிக்கின்றனர்.

    Must Read : ராஜேந்திர பாலாஜியை நெருங்கியது போலீஸ்.. ரகசியமாக உதவிய இருவர் கைது

    சென்னை திருவொற்றியூர் அறிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு நேற்று இடிந்ததில் 24 வீடுகள் தரைமட்டமாகின.

    Read More : திருவொற்றியூர் கட்டிட விபத்து: 24 குடும்பங்களை காப்பாற்றிய வட்டச் செயலாளர் தனியரசு

    இந்நிலையில், அந்த வளாகத்தில் உள்ள மேலும் 336 வீடுகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி விட்டு, அவற்றின் ஸ்திரத்தன்மையை கண்டறிய வல்லுநர் குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Building collapse, Chennai

    அடுத்த செய்தி