Home /News /tamil-nadu /

சென்னை தி நகரில் கொரோனா Offer உடன் தீபாவளி, ஆயுத பூஜை Purchase!

சென்னை தி நகரில் கொரோனா Offer உடன் தீபாவளி, ஆயுத பூஜை Purchase!

Youtube Video

தமிழக அரசு பிறப்பித்த கொரோனா விதிமுறைகளை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் காற்றில் பறக்க விட்டன. எந்த ஒரு கடைகளிலும் பொதுமக்கள் தனிநபர் இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.

    தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதற்காக தி நகர் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.

    கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வரும் பிரசித்திபெற்ற பண்டிகையானது தீபாவளி. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது லட்சக்கணக்கான மக்கள் ரங்கநாதன் தெருவில் பொருட்கள் வாங்குவதற்காக குவிந்து வருவர். இந்த வகையில் இன்னும் சில தினங்களில் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் அதற்கான பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் தி நகர் ரங்கநாதன் தெருவில் குவிய தொடங்கியுள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு தேவையான ஆடைகள், நகைகள் மற்றும் இதரப் பொருட்கள் வாங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான மக்கள் தி.நகர் ரங்கநாதன் தெருவில் குவிந்தனர்.

    எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் குவிந்ததால் போலீசார் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், கொரோனா இரண்டாம் அலையின் வீரியம் சற்று குறைந்த நிலையில் அதிக அளவில் மக்கள கூடியதால் போலீசார் கொரோனா விழிப்புணர்வு பணியிலும் ஈடுபட்டனர்.

    இருந்தபோதிலும் தமிழக அரசு பிறப்பித்த கொரோனா விதிமுறைகளை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் காற்றில் பறக்க விட்டன. எந்த ஒரு கடைகளிலும் பொதுமக்கள் தனிநபர் இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. மேலும் கொரோனா விழிப்புணர்வு பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வையும் வாடிக்கையாளர்களுக்கு கடை நிர்வாகம் ஏற்படுத்தவில்லை.

    பொதுமக்களும் பலர் முக கவசம் அணியாமல் கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Chennai, Diwali purchase, T-nagar

    அடுத்த செய்தி