ரூ.5.70 லட்சம் கோடி இருந்த கடனை ரூ.5.63 லட்சம் கோடியாக திமுக குறைத்தது- பழனிவேல் தியாகராஜன் பதிலடி
ரூ.5.70 லட்சம் கோடி இருந்த கடனை ரூ.5.63 லட்சம் கோடியாக திமுக குறைத்தது- பழனிவேல் தியாகராஜன் பதிலடி
அமைச்சர் பிடிஆர்
PTR Palanivel Thiyagarajan | தமிழகத்தின் கடன் சுமையில் 0.8 சதவீதம் குறைத்ததென்பது சாதாரண சாதனை அல்ல என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மக்களுக்கு தேவையான மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாத வெற்று அறிக்கை என்றும், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவோம் என் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்திருப்பது குறித்து அதிமுக உறுப்பினர் பேசினார். உங்கள் ஆட்சியிலும் கடன் தொகை அதிகரித்து இருந்தது.
பாதிப்புகள் ஏதும் இல்லாத உங்கள் ஆட்சியில் நீங்கள் கடன் பெற்றீர்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபோது 2வது அலை மற்றும் 3வது அலை கொரோனா பாதிப்பினால் பெருமளவில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. அப்படியிருந்தும் நிதிப் பற்றாக்குறையை சீரமைத்து, 7,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை குறைத்தது சாதாரணமல்ல என குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சியின் போது 5.70 லட்சம் கோடி இருந்த கடன் தொகையை 5.63 லட்சம் கோடியாக, சுமார் 0.8% குறைத்ததென்பது சாதாரண சாதனை அல்ல என பதிலளித்தார்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.