Home /News /tamil-nadu /

2014-ம் ஆண்டில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் - ப.சிதம்பரம்

2014-ம் ஆண்டில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் 90வது பிறந்தநாள் விழா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

  • News18
  • Last Updated :
2014ம் ஆண்டில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று பஜகவினர் வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் 90வது பிறந்தநாள் விழா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

அப்போது, குமரி அனந்தனுக்கு காங்கிரசார், ஆளுயுர மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது, இலக்கிய செல்வர் குமரி அனந்தன் வரலாற்று பெட்டகம். தேசியத்திற்கான, காங்கிரஸ் கட்சிக்காக அவர் ஆற்றிய பங்கு மறக்கமுடியாது. தேசத்தை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் விறுகொண்டு ஏழு வேண்டும். அரசியல் இயக்கத்தில் வெற்றியும் வரும், பின்னடைவும் வரும். நாம் தோல்வி வரும்போது துவண்டு விடுகிறோம். நமக்கு நம்பிக்கை வேண்டும். நாம் தான் இந்தியாவை ஒற்றமைப்படுத்த முடியும்.

சிறந்த தலைமை வேண்டும், உறுதியான தலைமை வேண்டும். அப்படி இருந்தால் இயக்கத்தை வழிநடத்த முடியும். சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் வழிநடப்போம்.

பா.ஜ.க திறமையாக செயல்பட்டு அனைத்து வகையிலும் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த கட்சியின் தலைமயை குற்றம்சாட்டுகிறார்கள் என்று அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியதாவது, இந்திய அரசியலில் குமரி அனந்தன் தெரிந்து கொள்ளாத விஷயம் இருக்கமுடியாது. குமரி அனந்தன் 1933 ஆம் ஆண்டில் பிறந்தார். அன்று நடந்த வரலாறு பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் நடந்த வரலாற்றை மறைந்து வருகிறார்கள். இன்னும் வருகிற நாள்களில் 2014 ஆம் ஆண்டில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று எழுதினாலும் எழுவார்கள் என்று பாஜகவை விமர்சித்தார்.

மேலும், பாடப்புத்தகத்தின் வாயிலாக தான் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும். அதுமாறி வேறுவகையாக நூல்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது என்றும் தெரிவித்தார்.

Also read... வாகன விபத்து இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜவஹர்லால் நேரு தனது 40 வயதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றார். இளைஞர்கள் பொறுப்பிற்கு, பதவிக்கு வரமுடியாது என்ற எண்ணத்தை நாம் மனதளவிலாவது ஒழிக்க வேண்டும். குமரி அனந்தன் தன் (சுயசரிதை) வரலாற்றை எழுதவேண்டும். அவர் எழுதினால் அதில், தமிழகத்தின் வரலாறு, காங்கிரஸ் கட்சியின் வரலாறு இடம் பெறும். அதனை ஒரிரு வருடங்களில் அவர் எழுதி எங்களுக்கு தரவேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.

இவ்விழாவில், முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் எம்.பி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Congress, P.chidambaram

அடுத்த செய்தி