Home /News /tamil-nadu /

ஓட்டுநர் இன்றி இயங்கும் வாகனம் கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை

ஓட்டுநர் இன்றி இயங்கும் வாகனம் கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை

Chennai IIT Open House Exhibition

Chennai IIT Open House Exhibition

Chennai IIT | ஓட்டுநர் இன்றி இயங்கும் பேட்டரி வாகனம் உள்ளிட்ட 60 நவீன கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

    சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி-யில் ஆண்டுதோறும் 'Open House'  என்ற பெயரில், புதிய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஐஐடி வளாகத்தில் நடைபெறும் கண்காட்சியை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, திறந்து வைத்தார்.

    இதில், ஓட்டுநர் இன்றி இயக்கப்படும் பேட்டரி வாகனம் உட்பட 60 கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றும், மாணவர்களின் திறமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. குறிப்பாக, விமான நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் இயக்கப்படும் பேட்டரி வாகனங்களை, ஓட்டுநர் இன்றி இயக்குவதற்கான நவீன கண்டுபிடிப்பை வடிவமைத்து அசத்தினர்.

    அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்.. புதுச்சேரியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மழலையர்...


    இது குறித்து பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, ஓட்டுநர் இல்லாமல் இயங்கக் கூடிய இந்த வாகனம் செல்லும் வழித்தடத்தில், எதிரில் ஏதேனும் தடைகள் இருந்தால் உடனடியாக நின்று பாதையை மாற்றி செல்லும் என்று தெரிவித்தார். இதற்காக, சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். மேலும், சென்னை போன்ற நகரங்களில் மழை நீர் அதிகம் தேங்கும் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும், நவீன கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும் ஐஐடி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.



    முதல் முறையாக பெட்ரோல், டீசல் இன்றி பேட்டரி மூலமாக இயங்க கூடிய பார்முலா கார் ஒன்றையும் உருவாக்கி உள்ளதாக மாணவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். உலக அளவில் போட்டிபோடும் வகையில் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளதாக ஐஐடி மாணவர்கள் கூறுகின்றனர். இந்த நவீன கண்டுபிடிப்புகளை விரைந்து மேம்படுத்தி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பயணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Chennai, IIT Chennai, ITI Students

    அடுத்த செய்தி