முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புரட்டாசி கடைசி ஞாயிற்றுக்கிழமையிலும் காசிமேடு மீன்மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்! : இன்றைய விலை நிலவரம்!

புரட்டாசி கடைசி ஞாயிற்றுக்கிழமையிலும் காசிமேடு மீன்மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்! : இன்றைய விலை நிலவரம்!

காசிமேடு

காசிமேடு

மீன்களின் விலையை பொறுத்தமட்டில் கடந்தவாரத்தை காட்டிலும் இந்த வாரம் சற்றே விலை ஏறியிருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். விலை சற்றே உயர்ந்திருந்தாலும் அசைவ விரும்பிகள்  பலரும் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்

  • Last Updated :
  • Chennai, India

புரட்டாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதிலும் மீன்களை வாங்க ஆர்வம் காட்டிய அசைவபிரியர்களின் கூட்டத்தால் மீன்கள்  விலை சற்றே அதிகரித்தது.

சென்னை காசிமேட்டில் நள்ளிரவு முதலே மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காசிமேட்டில் பொதுவாக நள்ளிரவு இரண்டு மணியளவிலே தொடங்கும் விற்பனையில் பெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் மீன்களை வாங்கி செல்வது வழக்கம். அசைவ விரத நாட்களடங்கிய புரட்டாசி மாதத்தில் பெரும்பாலும் பலரும் அசைவத்தை  சாப்பிடுவதை பலரும் தவிர்த்து வந்தனர்.

புரட்டாசி தொடங்கியதில் இருந்து  கடந்த சில வாரங்களாகவே காசிமேட்டில் மீன்களின் விலையானது குறைந்த விலையிலேயே காணப்பட்டு வந்தது.

இன்னும் ஒரு சில நாட்களில் புரட்டாசி முடியவிருக்கும் நிலையில் புரட்டாசியின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று மீன்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மீன்களின் விலையை பொறுத்தமட்டில் கடந்தவாரத்தை காட்டிலும் இந்த வாரம் சற்றே விலை ஏறியிருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். விலை சற்றே உயர்ந்திருந்தாலும் அசைவ விரும்பிகள்  பலரும் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்.

மீன்களின் விலைப்பட்டியல்

வஞ்சிரம் கிலோ850
வவ்வா650
நாயாறல்600
பெரிய சங்கரா600
கடம்பா550
இறால்500

சராசரியாக கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் 100 முதல் 150 வரை விலை அதிகரித்துள்ளது.

top videos

    செய்தியாளர் : அசோக் குமார்

    First published:

    Tags: Chennai, Purattasi