Home /News /tamil-nadu /

குழந்தை இல்லாத ஏக்கம்.. வாட்டிய தனிமை - விபரீத முடிவு எடுத்த வயதான தம்பதி

குழந்தை இல்லாத ஏக்கம்.. வாட்டிய தனிமை - விபரீத முடிவு எடுத்த வயதான தம்பதி

சென்னையில் வயதான தம்பதி தற்கொலை

சென்னையில் வயதான தம்பதி தற்கொலை

கவனிக்க ஆள் இல்லாமல் தனிமையில் வாழ்ந்த வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

     சென்னையில் வயதான தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

    சென்னையை அடுத்த கீழ்க்கட்டளை, டாக்டர் ராமமூர்த்தி நகர், 2வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் 76-வயதான நம்பிராஜன். இவர் பிரபல சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி 75-வயதான பாப்பா. இவர் ஒய்வு ஒய்வு பெற்ற ஆசிரியர்.
    திருமணம் ஆனதிலிருந்தே குழந்தை இல்லாத ஒரு ஏக்கத்தில் வாழ்ந்து வசித்து வந்த இந்த தம்பதிகள் வயது முதிர்விலும் தனிமையில் இருந்துள்ளனர். வயது முதிர்வு காரணமாக நம்பிராஜன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அவரது மனைவி பாப்பாவுக்கு நுரையீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Also Read: நாகதோஷம் கழிக்க கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவி திடீர் மரணம்.. சாமியாரிடம் கிடுக்கிபிடி விசாரணை

    இந்நிலையில் நம்பிராஜனின் சகோதரர் சுப்பிரமணி என்பவர் நேற்று மதியம் தொலைபேசியில் நம்பிராஜனை தொடர்பு கொண்டபோது நீண்ட நேரமாக செல்போனை எடுக்காததால் அண்ணனை நேரில் சந்திக்க நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது நம்பிராஜன் வீட்டின் வரவேற்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

    இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சுப்பிரமணி தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய நம்பிராஜன் உடலை இறக்கினர்.
    பின்னர் நம்பிராஜன் மனைவியை தேடியபோது வீட்டின் படுக்கை அறையில் மனைவி பாப்பா தூக்கிட்டபடி இருந்ததை கண்ட போலீசார் உடல்களை கைப்பற்றினர். பின்னர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக  குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

    Also Read: போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து அதிமுக பெண் வேட்பாளரை தாக்கிய தி.மு.க-வினர்.. திண்டிவனத்தில் பரபரப்பு

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கவனிக்க யாரும் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    செய்தியாளர்: ப.வினோத்கண்ணன்  
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Commit suicide, Couple, Crime News, Death

    அடுத்த செய்தி