Home /News /tamil-nadu /

மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் - டி.ஆர். பாலு

மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் - டி.ஆர். பாலு

மாவட்ட கலெக்டருக்கு கீழே வேலை பார்க்கும் அதிகாரிகள் சரியாக இல்லை என்றால் அவர்களை வேறு ஊருக்கு மாற்றி விடுங்கள். பொதுமக்களுக்கு சேவை செய்யாத அதிகாரிகளால் எந்த பயனும் இல்லை. - டி.ஆர். பாலு

    மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள், தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

    சென்னையை அடுத்த தாம்பரம் முத்துலிங்கம் தெரு டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம், அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று டி.ஆர்.பாலு பேசியதாவது, "செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கு கீழே பணியாற்றும் சில அதிகாரிகள் பொதுமக்களை அலைக்கழித்து வருகிறார்கள். ஒரு சான்றிதழ் வாங்க சென்றால்கூட முறையான பதிலை சொல்லாமல் அலைக்கழிப்பது தொடர்கிறது.

    சில அதிகாரிகள் பொதுமக்களை அலைக்கழித்து வருவதை சுட்டிக்காட்டுவது என் கடமை. மாவட்ட கலெக்டருக்கு கீழே வேலை பார்க்கும் அதிகாரிகள் சரியாக இல்லை என்றால் அவர்களை வேறு ஊருக்கு மாற்றி விடுங்கள். பொதுமக்களுக்கு சேவை செய்யாத அதிகாரிகளால் எந்த பயனும் இல்லை.இதை நான் மறைமுகமாகத்தான் சொல்கிறேன். மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள், தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையான ஆட்சி நடத்தி வருகிறார்.

    இதையும் படிங்க : புத்தாண்டு முதல் கேன் வாட்டர் விலை உயரப் போகிறது.. குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு

    பொதுமக்கள் எங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து உள்ளார்கள். வாக்களித்த மக்களுக்கு நாங்கள் பணியாற்ற வேண்டியுள்ளதுமுதலமைச்சர் அறையிலேயே திட்டப்பணிகள் குறித்து மின்னணு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பணிகள் எவ்வாறு செய்யப்பட்டு வருகிறது என்பது குறித்த விவரங்களை மின்னணு தகவல் பலகை வைத்து மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்" எனக் கூறினார்.

    இதையும் படிங்க :  தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்..
    Published by:Musthak
    First published:

    Tags: Tamilnadu

    அடுத்த செய்தி