• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பரிசுப் பொருள் என்ற பெயரில் வந்த பொருட்களை பார்த்து திகைத்த சுங்கத்துறை அதிகாரிகள்!

பரிசுப் பொருள் என்ற பெயரில் வந்த பொருட்களை பார்த்து திகைத்த சுங்கத்துறை அதிகாரிகள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அமெரிக்காவிலிருந்து சென்னை முகவரிக்கு மருத்துவ பொருட்கள் என்ற பெயரில் ஒரு பாா்சல் வந்திருந்தது. அதை திறந்து பாா்த்தனா்.அதனுள் 274 கிராம் பதப்படுத்தப்பட்ட உயா் ரக கஞ்சா இருந்ததை கண்டுப்பிடித்தனா்.

  • Share this:
    போலந்து,அமெரிக்கா,நெதா்லாந்து நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் பரிசு பொருட்கள், மருத்துவ பொருட்கள் என்ற பெயரில் அனுப்பட்டப்பட்ட  பார்சலில் இருந்து கொடிய விஷமுடைய 10 சிலந்தி பூச்சிகள், ரூ.10 லட்சம் மதிப்புடைய உயா்ரக போதை மாத்திரைகள், பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    சென்னை பழைய விமானநிலையத்திற்கு அமெரிக்காவிலிருந்து சரக்கு விமானம் ஒன்று இன்று காலை வந்தது. அதில் வந்த பாா்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

    அதில் ஒரு பாா்சல் போலந்து நாட்டிலிருந்து சென்னை வழியாக ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் முகவரிக்கு வந்திருந்தது.அந்த பாா்சலில் பரிசு பொருள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுங்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாா்சலை பிரித்து பாா்த்த அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா். அதனுள் உயிருடன் கூடிய 10 சிலந்தி பூச்சிகள் தனித்தனி கூம்பு வடிவ பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

    இதையடுத்து சுங்கத்துறையினா் உடனடியாக சென்னையில் உள்ள மத்திய வன குற்றப்புலனாய்வு துறைக்கு தகவல் கொடுத்தனா். அவா்கள் விரைந்து வந்து பாா்த்துவிட்டு, இவைகள் ஆப்ரிக்கா நாடுகளில் உள்ள மிகக்கொடிய விஷமுடைய சிலந்தி பூச்சிகள். இவைகளை இந்தியாவிற்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய் கிருமிகள் பரவிவிடும். எனவே இவைகளை வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று கூறினா்.

    இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்திய மாதத்திற்கு மீண்டும் மின் கட்டணம்? பொதுமக்கள் அதிர்ச்சி


    இதையடுத்து சுங்கத்துறையினா் கொடிய விஷமுடைய 10 வெளிநாட்டு சிலந்தி பூச்சிகளையும்,சரக்கு விமானம் மூலம் போலந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனா்.அதோடு இந்த சிலந்தி பூச்சிகளை பரிசு பொருள் என்ற பெயரில் இறக்குமதி செய்தவா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

    இதற்கிடையே அதே சரக்கு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை முகவரிக்கு மருத்துவ பொருட்கள் என்ற பெயரில் ஒரு பாா்சல் வந்திருந்தது. அதை திறந்து பாா்த்தனா்.அதனுள் 274 கிராம் பதப்படுத்தப்பட்ட உயா் ரக கஞ்சா இருந்ததை கண்டுப்பிடித்தனா்.

    அதோடு நெதா்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த மேலும் 2 பாா்சல்களையும் சந்தேகத்தில் பிரித்து பாா்த்தனா்.அதனுள் உயா் ரக போதை மாத்திரைகள் 92 கிராம் எடையில் இருந்தன. இதைப்போல் மொத்தம் 9 பாா்சல்களில் போதை மாத்திரைகள்,உயா் ரக கஞ்சா இருந்தன. இவைகளின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.10 லட்சம்.இந்த பாா்சல்கள் அனைத்துமே போலி முகவரிகளில் சென்னைக்கு வந்துள்ளன.இதையடுத்து சுங்கத்துறையினா் போதை மாத்திரைகள், உயா் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனா். அதோடு போதை கடத்தல் சட்டப்படி சுங்கத்துறையின வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

    மேலும் படிக்க: பேருந்துகளில் கஞ்சா கடத்துவதை தடுக்க, பயணிகளை பரிசோதிக்க வேண்டும் - போக்குவரத்துத்துறை உத்தரவு


    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் வெளி நாடுகளிலிருந்து வந்த பாா்சல்களில் கொடிய விஷமுடைய 10 சிலந்தி பூச்சிகள், ரூ.10 லட்சம் மதிப்புடைய உயா்ரக போதை மாத்திரைகள், பதப்படுத்தப்படுத்தப்பட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: