தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்தாதவர்கள் 1.48 கோடி பேர் உள்ளனர். இவர்களின் பெயர் பட்டியலை எடுத்து அவர்களது தொலைபேசி எண்களில் நேரடியாக மருத்துவத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த பணிக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள் பொது தளத்தில் அனைவருக்கும் கிடைக்கும் படி வெளியானது. இதில் தடுப்பூசி செலுத்தாத நபர்களின் பெயர், முழு முகவரி, செல்போன் எண், முதல் தடுப்பூசி எந்த மையத்தில் எப்போது செலுத்திக் கொண்டனர் என்ற விவரங்கள் உள்ளதாக சமூக வலைதளங்களில் புகார் எழுப்பப்பட்டது.
இந்த தகவல்களை கொண்ட excel பட்டியல் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரக கூகுள் கணக்கிலிருந்து லிங்காக வெளியானது. இந்த லிங்கை யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து தகவல்களை பார்க்க அனுமதி இருந்தது. மேலும் இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் எடிட் செய்யவும் அனுமதி இருந்தது.
இதுபொதுமக்களின் தனியுரிமையை பாதிக்கும் என சமூக ஊடகத்தில் பலரும் குரல் எழுப்பிய பிறகு இந்த தவறு சரி செய்யப்பட்டு, இந்த தகவல்கள் பொது தளத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், “துறை அதிகாரிகளின் தேவைக்காக உருவாக்கப்பட்ட பட்டியல் பொது வெளியில் தவறுதலாக வெளிவந்துவிட்டது.
Must Read : வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு... ரூ.1000ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ஆனால் அதில் பெயர் மற்றும் அவர்களது தடுப்பூசி செலுத்தியதற்கான அடையாள எண் மட்டுமே இருந்தது. செல்போன் எண் இல்லை. தடுப்பூசி செலுத்தியதற்கான அடையாள எண்ணை வேறு எங்கும் பயன்படுத்த முடியாது. பயனாளிகளின் செல்போன் எண்களை அனுமதி வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே கோ வின் செயலியில் பார்க்க முடியும்.” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Covid-19 vaccine, Cowin, Vaccine