Home /News /tamil-nadu /

பெண்களோடு உல்லாசமாக இருக்க கொள்ளை தொழில்... பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கைது... 95 சவரன் நகைகள் பறிமுதல்.

பெண்களோடு உல்லாசமாக இருக்க கொள்ளை தொழில்... பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கைது... 95 சவரன் நகைகள் பறிமுதல்.

பெண்களோடு உல்லாசமாக இருக்க பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளை

பெண்களோடு உல்லாசமாக இருக்க பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Last Updated :
ஐ.சி.எஃப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓடத்தொடங்கியுள்ளார். அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரை சோதனை செய்ததில் அவரிடம் ஸ்குரு ட்ரைவர், கத்தி, இரும்பு ராடு, சுத்தியல் இருப்பதை கண்டறிந்தனர்.
அந்நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் ஓட்டேரியை சேர்ந்த ஜெபராஜ் (52) என்பது தெரிய வந்தது. இவர் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, கதவின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.

அண்ணா நகர், அமைந்தகரை, வில்லிவாக்கம்,  ஐ.சி.எஃப், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளததும்  மேலும் அப்பகுதி காவல் நிலையங்களிலும் தொடர்ச்சியாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அந்தந்த காவல் நிலையங்களில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளை வாங்கி சோதனை செய்த போது அனைத்து சம்பவங்களிலும் ஈடுபட்டது தற்போது பிடிபட்டிருக்கும் ஜெபராஜ் என்பது தெரியவந்தது.

இவர் கடந்த சில மாதங்களில் ஐ.சி.எஃப் ஊழியர்கள் குடியிருப்பில் மட்டுமே 13 வீட்டை உடைத்து கொள்ளையடித்தது தெரிய வந்தது.
மேலும் இவர் மீது கடந்த 2019 ஆண்டிலிருந்து அரும்பாக்கம், கோயம்பேடு, அண்ணா நகர், அமைந்தகரை பகுதிகளில் வீட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதும்,மேலும் இவர் அரும்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.

Also Read : திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தீவிரவாதம் தன்னால் தலையெடுக்கும், அவங்க ராசி அப்படி - கடம்பூர் ராஜூ

பெண்களோடு உல்லாசமாக இருப்பதற்காக கொள்ளையடிக்க தான் பழகியதாகவும் பின்பு கொள்ளையடிப்பதை தொழிலாக மாற்றிக் கொண்டாதவும் போலீசார் விசாரணையில் ஜெபராஜ் தெரிவித்துள்ளார். மேலும், இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையடித்த தங்க நகைகளை நகைக்கடை ஒன்றில் கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையடித்த நகைகளை வாங்கிய இருவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து 95 சவரன் நகையை போலீசார் மீட்டுள்ளனர்.
Published by:Vijay R
First published:

Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள்

அடுத்த செய்தி