சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் கேன்சரை வரவழைக்க கூடிய வண்ண ரசாயனம் கலந்த 400 கிலோ பச்சை பட்டானி, பட்டர் பீன்ஸ் மற்றும் குட்கா, ஹன்ஸ், மாவா உள்ளிட்ட போதை பொருட்களை சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பகுதியில் கலப்படப் பொருட்கள் வினியோக செய்வதாக உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் மண்டல வாட்ஸ் அப் எண் மூலம் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், இன்று காலை முதல் 100 க்கும் மேற்பட்ட கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ், மாவா, குட்கா மற்றும் வண்ண எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அப்பள வகைகளை அதிரடியாக ஆய்வு செய்து பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், விவசாயிகளிடருந்து பெறப்படும் இந்த பொருட்கள் சிறிய குடோன்களில் வைத்து நிறமேற்றப்பட்டு மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் அதில் கேன்சர் வரவழைக்கக் கூடிய ரசாயனங்கள் கலக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
Must Read : காவல்துறையில் கோட்சே வாரிசுகள்... - திருமாவளவன் காட்டம்
மேலும், குழந்தைகளை கவரும் விதமாக எழுத்துக்கள் மற்றும் என் ஆகியவற்றில் அப்பளங்கள் உருவாக்கப்பட்டு அதை விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை குழந்தைகள் அதிகம் உண்ணுவதால் சிறுவயதிலேயே கேன்சர் வர கூடிய சூழ்நிலை உருவாகும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
செய்தியாளர் : கன்னியப்பன். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.