• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இரும்பு குண்டுமணிகளை ரூ.50 லட்ச தங்கம் என்று கூறி மோசடி: சென்னைப் பெண்ணை வடமாநிலத்தவர்கள் ஏமாற்றியது எப்படி?

இரும்பு குண்டுமணிகளை ரூ.50 லட்ச தங்கம் என்று கூறி மோசடி: சென்னைப் பெண்ணை வடமாநிலத்தவர்கள் ஏமாற்றியது எப்படி?

சென்னை மோசடி

சென்னை மோசடி

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இரும்பு குண்டுமணிகளை தங்கம் என்று கூறி வடமாநிலத்தவர்கள் ஏமாற்றியுள்ளனர்.

  • Share this:
சென்னை அயனாவரம் சோமசுந்தரம் தெருவில் மாவு கடை நடத்தி வருபவர் ஜெயந்தி. பட்டப்படிப்பு படித்த இவர், கொரோனா காலம் என்பதால் பொருளாதார தேவைகளுக்காக கணவருடன் இணைந்து வீட்டின் அருகே பெட்டிக்கடை ஒன்றை தொடங்கி வியாபாரம் நடத்தி வருகிறார்.

ஜெயந்தி நடந்தி வரும் கடைக்கு மதிய வேளையில் கூல்டிரிங்ஸ் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை வாங்கி செல்வதற்காக வடநாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கடந்த சில நாட்களாக அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் ஜெயந்திக்கு அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணியில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6ஆம் தேதி ஜெயந்தியின் கடைக்கு வந்த அதே கும்பல், மெட்ரோ சுரங்க தோண்டும் பணியின்போது ஒரு குண்டுமணி அளவு தங்கம் போன்ற பொருள் கிடைத்துள்ளதாகவும், இதை நகைக்கடையில் கொடுத்து சோதனை செய்து தருமாறு கேட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஜெயந்தி அருகில் உள்ள நகைக்கடையில் செய்து அதனை சோதித்தபோது 700 மில்லி கிராம் அளவுள்ள உண்மையான தங்க குண்டுமணி எனவும் அதனுடைய மதிப்பு 4,000 ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் இரண்டு தினங்கள் கழித்து, மீண்டும் அதே கும்பல் கடைக்கு வந்து தங்களுக்கு மீண்டும் ஒரு குண்டுமணி கிடைத்துள்ளதாகவும், அதையும் சோதித்து தருமாறு ஜெயந்தியிடம் கேட்டுள்ளனர். அதை தங்க நகை கடையில் கொண்டு சோதித்தபோது அது உண்மையான 700 மில்லி கிராம் தங்கம் எனவும் அதனுடைய மதிப்பு 4000 ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது. பணத்தையும் வாங்கி அவர்களிடம்  கொடுத்திருக்கிறார். இதனால், அந்த கும்பலின் மீது ஜெயந்திக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இதன் பின்பு கடந்த 13 ம் தேதி மீண்டும் அதே கடைக்கு வந்த கும்பல் ஜெயந்தியிடம், சுரங்க தோண்டும் பணியின்போது பூமிக்கடியிலிருந்து கிட்டதட்ட 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள குண்டுமணிகளான மாலை கிடைத்ததாகவும் தற்போது அவசர தேவையாக இருப்பதால் அந்த தங்க குண்டுமணிகளான மாலையை வைத்துக்கொண்டு ரூ.4 லட்சம் பணம் தருமாறு கேட்டுள்ளனர்.

ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க குண்டுமணிகள் அடங்கிய தங்க நகையை வாங்க ஆசைப்பட்ட ஜெயந்தி, அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை எனவும் தன்னிடம் நகை பணம் என மொத்தமாக மூன்று லட்ச ரூபாய் வரை மட்டுமே இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் ரூ.2 லட்சம் ரொக்க பணம் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை ஆகியவற்றை பெற்றுக்கொண்டு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க குண்டுமணி என்று கூறப்பட்ட மாலையை ஜெயந்தியிடம் கொடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மீண்டும் ஜெயந்தி வழக்கம்போல தங்க நகை கடையில் கொண்டு சோதித்த போது, அவை அனைத்துமே இரும்பு குண்டு மணிகள் மீது தங்கம் போன்று முலாம் பூசப்பட்ட போலியான தங்க குண்டுமணிகள் என தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து அயனாவரம் போலீசில் ஜெயந்தி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த கும்பல் வேறு யாரையெல்லாம் இது போல ஏமாற்றியுள்ளார்கள் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: