வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட வெளிமாநில ஜோடிகள்! 

வட மாநில புதுமண ஜோடி

ஏற்கனவே திருமணம் திட்டமிடப்பட்டிருந்ததாலும்  இன்று கோவில் திறக்குமோ என்ற அச்சம் இருந்ததாக  தெரிவிக்கும் திருமண தம்பதிகள்  ராஜிஸ் மற்றும் அர்ப்பணா மிகுந்த மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

  • Share this:
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும்பாலான அளவு கொரோனோ நோய் தொற்று பரவல் குறைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து வகை வழிபாட்டுத்தலங்களுக்கும்  அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இன்று காலை 6மணி முதல் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதற்காக கோவில் நிர்வாகம் தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

நோய்தொற்று பரவலை தடுப்பதற்கு கோவில் வளாகங்களில்  கிருமிநாசினி தெளித்தல், பக்தர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு 2 மீட்டர் இடைவெளி, கை கால்களை சுத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் திறக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

Also Read:   "தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழ்நாடே தயாராக உள்ளது; ஆனால் தடுப்பூசி தான் இல்லை" - மா.சுப்பிரமணியன்

இந்த நிலையில் சென்னை வடபழனி முருகன் கோவிலில் பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் மும்பையைச் சேர்ந்த திருமண ஜோடிகள் இன்று வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

Also Read:   வியூகங்களை தவிடுபொடியாக்கும் ‘பாகுபலி’ காட்டு யானை - 2வது நாளாக போராடும் வனத்துறையினர்!

ஏற்கனவே திருமணம் திட்டமிடப்பட்டிருந்ததாலும்  இன்று கோவில் திறக்குமோ என்ற அச்சம் இருந்ததாக  தெரிவிக்கும் திருமண தம்பதிகள்  ராஜிஸ் மற்றும் அர்ப்பணா மிகுந்த மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர். தங்கள் திருமணம் ஏற்கனவே வேறு ஒரு நாளில் நிச்சயிக்கப்பட்டு பின்னர் ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் இன்று திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தாலும் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்த முடியாத நிலை இருந்தது ஆனால் தமிழக அரசு அளித்த தளர்வு காரணமாக தங்கள் திருமண நாளில் கோவில்கள் திறக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார் .
Published by:Arun
First published: