• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மழை வெள்ளத்தில் திணறும் வடசென்னை பகுதிகள்- அதிகாரிகள் உதவவில்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு

மழை வெள்ளத்தில் திணறும் வடசென்னை பகுதிகள்- அதிகாரிகள் உதவவில்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு

வடசென்னை மழை நீர்

வடசென்னை மழை நீர்

கனமழையின் காரணமாக வட சென்னை பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
    தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் நேற்று காலையில் இருந்து விட்டு விட்டு நல்ல மழை பெய்தது குறிப்பாக இரவு 9 மணி அளவில் பெய்ய தொடங்கிய கனமழை ஒரு மணிநேரத்திற்கு மேலாக நீடித்தது.

    மீண்டும் நள்ளிரவில் இடி மின்னலுடன் சென்னை முழுவதும் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து காலை வரை நீடித்துக் கொண்டே வந்தது. இதனால் வடசென்னை திருவெற்றியூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர் புளியந்தோப்பு, வியாசர்பாடி, கொடுங்கையூர், திருவிக நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை கொருக்குபேட்டை சிவாஜி நகர், அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் வீடுகளிலும் புகுந்து பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதைப்போல் சென்னை தண்டையார்பேட்டை ரெட்டைக்குழி தெருவில் குடியிருப்புக்குள் மழைநீர் வீடுகளிலும் புகுந்து பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் வீட்டில் தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய நபர்கள் முதல் தளத்தில் மாறி வருகின்றனர். மேலும் சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் என்ன செய்வது என்று திகைத்துப் போயுள்ளனர்.

    சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்து உள்ளதை மோட்டாரை வைத்து அப்புறப்படுத்துங்கள் என்று பலமுறை கேட்டும் யாரும் செவிசாய்க்கவில்லை. சம்மந்தப்பட்ட இடத்திற்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை என குற்றம் சாட்டுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுதும் தூங்காமல் குடத்தில் தண்ணீரை எடுத்து அப்புறப்படுத்துகின்றனர். மிகுந்த வேதனையுடன் பொதுமக்கள் தங்களுடைய சொந்த செலவில் மோட்டார் வாடகை எடுத்து மழைநீரை அப்புறப்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி கழிவுநீர் அகற்றும் நிலையம் இருந்தும் பயனில்லாமல் இருக்கிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அதிகாரியிடம் கேட்டபோது மோட்டார்கள் அனைத்தும் பழுதாகி உள்ளது மற்றும் ஆட்கள் பற்றாக்குறை என தெரிவிக்கிறார்கள்.

    இதைப்போல் ஒரு பகுதியான வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலம் பகுதியில் மழைநீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. மற்றொரு இடமான வியாசர்பாடி ஜீவா மேம்பாலம் கீழ் பகுதியிலும் மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மோட்டார் போட்டு தண்ணீரை வெளியே எடுத்து வருகின்றனர். மேலும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை டிக்காஸ்டர் சாலை, ஸ்டாரான்ஸ் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    இதனால் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியே எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதைப்போல் சென்னை ராயபுரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ராஜாராம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: